பெரியகுளம், அக். 10- பெரிய குளம் டி. கல்லுப்பட்டி திராவிடர் கழகம், பகுத் தறிவாளர் கழகத்தின் சார்பாக தந்தை பெரியார் பிறந்தநாள் விழா மற்றும் முதியவர்கள் நிகழ்ச்சி யில், 95 நபர்களுக்கு சேலை வழங்கும் விழா நடைபெற்றது.
தமிழ்நாடு அரசு அறிவித்த சமூகநீதி நாள் உறுதிமொழி எடுக்கப் பட்டது பொதுமக்கள் அனைவருக்கும் இனிப்பு பொங்கல் வழங்கப்பட் டது. ஈட்டி கணேசனின் மந்திரமா, தந்திரமா? நிகழ்ச்சி பெண்களி டையே மிகப்பெரிய வரவேற்பு பெற்றது. பகுத்தறிவாளர் கழகம் மணிவாசகம் தலைமை வகித்தார். ஒன் றிய செயலாளர் ஆதித் தமிழன் வரவேற்றார்.
பொதுக்குழு உறுப்பி னர் அன்புக்கரசன் முன் னிலை வகித்தார். பட்ட தாரி ஆசிரியர் மெஹபூப் பீவி, விடுதலைச் சிறுத் தைகள் கட்சி பொறுப்பா ளர் மது சிறப்பு அழைப் பாளர்களாக கலந்து கொண்ட னர். நிகழ்ச்சி திருமண மண்டபத்தில் முகக் கவசத்துடன் போதிய தனி மனித இடைவெளி கட்டுப்பாடுகளுடன் நடைபெற்றது.
No comments:
Post a Comment