ஏல முடிவை நிறுத்திவைத்த ஒன்றிய அரசு
மும்பை, அக்.2 ஜெ.ஆர்.டி. டாடா தொடங்கிய ஏர்இந்தியா நிறுவனத்தை 67 ஆண்டுகள் கழித்து மீண்டும் ரத்தன் டாடா தலைமையிலான டாடா நிறுவனம் கைப்பற்றியதாக செய்தி வெளியான நிலையில், இதுகுறித்து இன்னும் இறுதி முடிவு எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. ஏவியேசன் துறையில் இறங்கியுள்ள அம்பானி சகோதரர்களுக்கு ஏர் இந்தியாவை தரும் விதமாக ஏல முடிவை நிறுத்திவைத்துள்ளதாக நிபுணர்கள் கூறியுள்ளனர்.
ஏர் இந்தியா நிறுவனம் இழப்பில் இயங்குவதால் அதன் 70 சதவீத பங்குகளை விற்கப்போவதாக மோடி தலைமையிலான அரசு 2016 ஆம் ஆண்டு முதல் கூறிவருகிறது.
இந்நிலையில், ஏர் இந்தியா நிறு வனத்தை வாங்க ஸ்பைஸ்ஜெட் நிறுவன தலைவர் அஜய் சிங் மற்றும் டாடா நிறுவனம் இடையே போட்டி நிலவுவதாகவும், இதில் டாடா நிறுவனத்திற்கு சாதகமாக ஒன்றிய அரசு முடிவெடுத்திருப்பதாகவும் செய்தி வெளியானது.
இந்தச் செய்தியை மறுத்துள்ள ஒன்றிய முதலீடு மற்றும் பொது சொத்து மேலாண்மைத் துறை, இந்த விவகாரம் குறித்து ஒன்றிய அரசுதான் இறுதி முடிவு எடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அமித்ஷா தலை மையில் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், வர்த்தக அமைச்சர் பியூஷ் கோயல் மற்றும் விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா ஆகியோர் அடங்கிய அமைச்சரவைக் குழு விரைவில் முடிவெடுக்கும் என்றும், ஏர் இந்தியா விற்பனை குறித்த அதி காரப்பூர்வ அறிவிப்பை அவர்கள் தான் வெளியிடுவார்கள் என்றும் சொல்லப்படுகிறது.
ஏற்கெனவே ரபேல் விமான உதிரிப்பாகத்தை இணைக்கும் ஒப்பந்தத்தைப் பெற்றுள்ள முகேஷ் அம்பானியின் சகோதரர் அனில் அம்பானி தனது சகோதரருடன் இணைந்து விமான நிறுவனம் ஒன்றை துவங்கும் அறிவிப்பை சில ஆண்டுகளுக்கு முன்பு வெளியிட்டார்.
இந்த நிலையில் அவர்களுக்குச் சாதகமாகவே ஏர் இந்தியா நிறுவனத்தை டாடாவிற்கு கொடுக்க மோடி அமித்ஷா மறுத்து வருவதாக இந்த ஏலத்தைக் கவனித்து வரும் ஆர்வலர்கள் கூறியுள்ளனர்.
No comments:
Post a Comment