ஆசிரியர் விடையளிக்கிறார் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, October 2, 2021

ஆசிரியர் விடையளிக்கிறார்

கேள்வி :  மரண தண்டனையை ரத்து செய்தல் வேண்டும்என்பது திராவிட கொள்கை விளக்க அறிக்கையில் ஒரு கோட்பாடாக இடம்பெற்று உள்ள நிலையில், விருத்தாசலம் ஆணவக் கொலையில் ஒருவருக்கு மரணதண்டனை அளிக்கப்பட்டு இருக்கும்கடலூர் தீர்ப்பு வரவேற்கத்தக்கதேஎன்றுவிடுதலையில் தலையங்கம் (27.9.2021) இடம்பெற்று உள்ளதை எவ்வாறு புரிந்து கொள்வது?

- தமிழ்ச்செல்வன், சிறுப்பாக்கம்

பதில்:  மரண தண்டனை கூடாது என்பது நமது நிலைப்பாடு தான். அதில் மாற்றமில்லை; ஆனால் அது சட்டமாகும் வரை உள்ள சட்ட அமலை நாம் தடுக்க முடியாது அல்லவா?

கொடுமையான ஜாதிவெறி ஆணவக் கொலைக்கு தற்போது அமலில் உள்ள தண்டனைகளில் உச்ச தண்டனையைத் தருவது, குற்றத்தின் கொடூரம் தடுக்கப்பட வேண்டுமென்பது தான். தூக்கு தண்டனை கொடுக்கும் அளவுக்கு, அதை நியாயப்படுத்தும் அளவுக்கு கொடூரமான குற்றம்  ஆணவக்கொலை என்பதால்விடுதலைதலையங்கம் - வரவேற்கத்தக்கது என்று எழுதியது முரண்பாடு அல்ல; இடமாற்ற தோற்றப் பிழை - வாசகருக்கு அவ்வளவுதான்!

கேள்வி : சேலம் மோரூரில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக் கொடி ஏற்றக்கூடாது என்று காவல்துறை அகற்றியது - சரியா?

- .கருணாமூர்த்தி, நெய்வேலி

பதில்: முழுவிவரங்கள் என்னவென்பதை ஆராய்ந்து சிலராஜாவை மிஞ்சும் ராஜ விசுவாச  காவல்துறை அதிகாரிகள் மீது தக்க நடவடிக்கை எடுக்கலாம்; எடுக்க வேண்டும்!

கேள்வி: “பி.எம்.கேர்ஸ் என்ற அமைப்பு  ஒரு தனியார் நிறுவனம்; அரசு நிறுவனம் கிடையாது. எனவே கணக்கு வழக்குகளை நிதி வரவு விவரங்களை கொடுக்க முடியாதுஎன்று ஒன்றிய அரசு டில்லி உயர்நீதிமன்றத்திலேயே பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்துள்ளதே. நாடு எதை நோக்கிப் போகிறது?

- சிவகுமார் சண்முகம், பஹ்ரைன்

பதில்: இது பற்றிமுரசொலியின் அருமையான விளக்கமான தலையங்கம், 30.6.2021இல்இந்துஆங்கில நாளேட்டின் நடுப் பக்கக் கட்டுரை - இரண்டையும் படித்தால் நாடு எங்கே எப்படிப் போகிறது என்பது நன்கு புரியும்.

கேள்வி:  பக்திப் பாடல்களை  எழுதியவர்களையும், ஆன்மிக பரப்புரை செய்த ஆன்மிகவாதிகளையும் தமிழுக்குத் தொண்டு செய்தவர்கள் என்று கூறிக் கொண்டு தமிழின் வளர்ச்சிக்காக தம் வாழ்நாளை ஒப்படைத்த திராவிடர் இயக்கத்தவர்களை தமிழின் எதிரிகளைப்போல் காட்டும் கூலிகளைக் கண்டும் காணாமல் விடுவது சரியா?

- .மு.யாழ் திலீபன், வேப்பிலைபட்டி

பதில்: ‘அனைவருக்கும் அனைத்தும்என்ற பரந்த பார்வையும், நோக்கமும் அரசின் அணுகுமுறையாக இருக்கும் நிலையில் - இந்நிலை ஏற்பட்டாலும் கூட, திராவிடர் இயக்கத்தின் பங்களிப்புகள் தகுதி உடையவை - ஒரு போதும் நமது அரசு புறக்கணிக்காது என்று நாம் நம்புவோமாக!

கேள்வி : கரோனா தடுப்பூசி போட்டு சான்றிதழுடன் வருபவருக்கே  அனுமதி என்று திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளதை எப்படிப் பார்க்கிறீர்கள்?

- தமிழ் மைந்தன், சைதாப்பேட்டை

பதில்: ‘தீராத வினையெல்லாம் தீர்த்து வைப்பான் கோவிந்தன்என்பது பொய், பொய்யே! என்று திருப்பதி தேவஸ்தானமே பிரகடனப்படுத்துகிறது என்பதே பொருள்; நான் இப்படித்தான் பார்க்கிறேன்.

கேள்வி : பெரியார் சுயமரியாதைத் திருமண நிலையத்தில் ஜாதிமறுப்புத் திருமணம் செய்து கொள்ளும் தோழர்களைத் தொடர்ந்து பாதுகாக்க நடவடிக்கைகள் உள்ளதா?

- விஜயகுமார் வீரப்பன், ஜெயங்கொண்டம்

பதில்: அவர்களுக்குரிய பாதுகாப்புக் கண்ணோட்டத்தில் என்றும் துணை நிற்போம்; செய்ய வேண்டிய ஏற்பாடுகளை நிச்சயம் செய்வோம்!

கேள்வி: தீபாவளிக்கு பட்டாசு வெடிக்க கூடுதல் நேரம் ஒதுக்க முடியாது என்று உச்சநீதிமன்றம் கூறியுள்ளதே?

- .சங்கர், திருமுடிவாக்கம்

பதில்: பிள்ளையாரை பொதுவிடங்களில் கும்பல் கும்பலாகச் சென்று கடலில் கரைப்பதால் கரோனா பரவுதல் அதிகம் ஏற்படக்கூடும் என்பதால் தடை செய்த திமுக அரசு மேல் பாய்ந்தகாவிகள்இதற்கு என்ன கூறப்போகிறார்கள்; உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்துப் போராடப் போகிறார்களா?

கேள்வி: தமிழ்நாடு அரசு நிறைவேற்றிய நீட் எதிர்ப்பு மசோதாவின் தற்போதைய நிலை என்ன?

- இராஜலெட்சுமி, மதுரை

பதில்: அது ஆளுநருக்குச் சென்று, குடியரசுத்தலைவருக்குச் செல்ல வேண்டும்; இதுவரை எந்த அளவுக்கு இம்மசோதாவின் நிலை என்பது புரியாவிட்டாலும், தொடர்ந்து மக்கள் இயக்கம் நடத்துவதின் மூலமாக  - ‘நீட்க்கு எதிர்ப்பு உத்வேகம் பெறும் வகையில் பிரச்சாரம் - போராட்டம் நடைபெறுவது உறுதி. பிரச்சாரம் போகப்போக சூடு பிடிக்கும்!

கேள்வி:  தமிழ்நாட்டு மக்களைப் போலவே பா..கவை ஒதுக்கி வைத்துள்ள பஞ்சாப் மாநிலத்தில் சித்து என்னும் உயர்ஜாதிக்காரர் மூலம் தமது  விளையாட்டை தொடங்கிவிட்டது போலிருக்கிறதே. காங்கிரஸ் சமாளிக்குமா?

- மலையரசி, செங்கோட்டை

பதில்: பா... தனது வழக்கமானகூடு விட்டு கூடு பாய்ச்சலுக்குமற்ற கட்சிகளை அழைப்பது, அரவணைப்பது, போன்ற வித்தைகள் துவங்கி விட்டன பஞ்சாபில்!

மேனாள் காங்கிரஸ் முதல் அமைச்சர் பதவி போனவுடன் அமித்ஷாவை சந்தித்தவுடன்,’சித்துவிளையாட்டுகளும் துவங்கி மும்முரமாகி விட்டன! அந்தோ பஞ்சாப்பே! பா... வியூகங்கள் வகுத்து வித்தைகளின் உச்சத்தில் நிற்கிறது!

அந்தோ ஜனநாயகமே, உன் நிலை இவ்வளவு பரிதாபமா? மகா வெட்கம்!

கேள்வி:  இந்தியாவைஹிந்து ராட்டிராஎன்று அக்டோபர் 2-ஆம் தேதிக்குள் அறிவிக்க வில்லை என்றால் ஜல சமாதி அடைந்து விடுவேன் என்பதாக சாமியார் ஒருவர் மிரட்டுகிறாரே?

- .முகிலா, குரோம்பேட்டை.

பதில்: ஏற்கெனவே ஒரு சாமியாரின் கொலைக்கு .பி.யில் விசாரணை நடக்கிறது! ஒரு வேளை அப்படி நடந்தால் சட்டப்படி போஸ்டர்மார்ட்டம் நடைபெறாமலே இறுதி நிகழ்வுகள் நடக்கக்கூடும் - காரணம் அவரது வெளிப்படையான வாக்குமூலம்! அவ்வளவுதான்!

No comments:

Post a Comment