காபூல், அக். 17- ஆப்கானிஸ் தானில் தலிபான்கள் ஆட்சியை கைப்பற்றிய நாள் முதலே அய்.எஸ். பயங்கரவாதிகள் ஷியா பிரிவு முஸ்லிம்களையும், தலிபான்களையும் குறி வைத்து தொடர்ச்சியாக தாக்குதல் நடத்தி வரு கின்றனர்.
குறிப்பாக கடந்த சில வாரங்களாக ஷியா பிரிவு முஸ்லிம்களின் மசூதிக ளில் அடுத்தடுத்து குண்டு வெடிப்பு சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன.
இந்த நிலையில் காந்த காரில் உள்ள மிகப்பெரிய மசூதியில் அடுத்தடுத்து நடந்த தற்கொலைப்படை தாக்குதல் அந்த நாட்டை அதிரவைத்துள்ளது.
காந்தகார் மாகாணத் தின் தலைநகர் காந்தகா ரில் உள்ள ஷியா பிரிவு முஸ்லிம்களின் மசூதியில் வெள்ளிக்கிழமை சிறப்பு தொழுகை நடைபெற்றது. உள்ளூரை சேர்ந்த 500-க்கும் அதிகமான ஷியா பிரிவு முஸ்லிம்கள் இந்த தொழுகையில் கலந்து கொண்டனர்.
இந்த நிலையில் உட லில் சக்தி வாய்ந்த வெடி குண்டுகளை கட்டிக் கொண்டு வந்த பயங்கர வாதிகள் 2 பேர் மசூதியின் நுழைவாயிலில் நின்று குண்டுகளை வெடிக்க செய்தனர். பயங்கர சத்தத் துடன் குண்டுகள் வெடித்து சிதறியதில் அந்த பகுதியே அதிர்ந்தது.
அடுத்தடுத்து நடந்த இந்த தற்கொலைப்படை தாக்குதல்களில் 37 பேர் சம்பவ இடத்திலேயே உடல் சிதறி உயிரிழந்த னர். மேலும் 70-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். அவர் களில் பலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்ப தால் பலி எண்ணிக்கை மேலும் உயரும் என அஞ்சப்படுகிறது. இந்த தாக் குதலுக்கு அய்.எஸ் பயங்க ரவாத இயக்கம் பொறுப் பேற்றுள்ளது.
No comments:
Post a Comment