ஜெய்ப்பூர்,அக்.9- மதுபானக் கடைகள் மற்றும் ஊழல் முறைகேட்டில் 500, 2000 ரூபாய் நோட்டுகளே பெரும் பாலும் பயன்படுத்தப்படுவதால் அந்த நோட்டுகளில் இருந்து காந்தியார் படத்தை நீக்க வேண்டும் என ராஜஸ்தான் மாநில காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் பரத்சிங் குந்தன்பூர் கோரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடிக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: காந்தியார் உண்மையை அடையாளப்படுத்துகிறார். அவரது படம் 500, 2000 ரூபாய் நோட்டுகளிலும் அச்சிடப்பட்டுள்ளன. ஆனால் பெரும்பாலும் இந்தநோட்டுகள் லஞ்சம் மற்றும் ஊழலுக்கு பயன்படுத்தப்படுகின்றன. மதுபானக் கூடங் களிலும் இந்த உயர் மதிப்பு நோட்டுகள் பயன்படுத்தப்படு கின்றன. இது காந்தியாரை அவமதிப்பதாகும்.
எனவே 500, 2000 ரூபாய் நோட்டுகளில் இருந்து காந்தியின் உருவப் படத்தை நீக்க வேண்டும். ஏழைகள் பயன்படுத்தும் குறைந்த மதிப்பு ரூபாய் நோட்டுகளில் மட்டுமே பயன்படுத்த வேண்டும். 500, 2000 ரூபாய் நோட்டுகளில் காந்தியின் படத்துக்கு பதிலாக அவரது மூக்கு கண்ணாடியை பயன்படுத்தலாம். இத்துடன் அசோகச் சக்கரத்தையும் பயன்படுத்தலாம். இவ்வாறு சட்டமன்ற உறுப்பினர் பரத் சிங் கூறியுள்ளார்.
கரோனா தடுப்பூசி போடாத அரசு ஊழியர்கள் பணிக்கு வர தடை
டில்லி மாநில அரசு உத்தரவு
புதுடில்லி,அக்.9- கரோனா தடுப்பூசிகூட போடாத டில்லி அரசு ஊழியர்களும், ஆசிரியர்களும் வருகிற 16ஆம் தேதி முதல் அவர்களது அலுவலகங்களிலும், பள்ளிகளிலும் பணியாற்ற அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்று டில்லி அரசு தலைமைச் செயலாளர் கூறியுள்ளார்.
டில்லி அரசு தலைமைச் செயலாளரும், டில்லி பேரிடர் மேலாண்மை ஆணைய நிர்வாகக் குழு தலைவருமான விஜய் தேவ் நேற்று (8.10.2021) வெளியிட்ட உத்தரவில் கூறியிருப்பதாவது:- ஒரு ‘டோஸ்’ கரோனா தடுப்பூசிகூட போடாத டில்லி அரசு ஊழியர்களும், ஆசிரியர்களும் வருகிற 16ஆம் தேதி முதல் அவர்களது அலுவலகங்களி லும், பள்ளிகளிலும் பணியாற்ற அனுமதிக்கப்பட மாட் டார்கள். முன்களப் பணியாளர்களுக்கும் இது பொருந்தும். அவர்கள் அனைவரும், தடுப்பூசி போட்டுக்கொள்ளும் வரை விடுப்பில் இருப்பதாக கருதப்படுவார்கள். டில்லியில் பணிபுரியும் தமது ஊழியர்களுக்கும் இது போன்ற கட்டுப்பாடு விதிப்பது குறித்து ஒன்றிய அரசு பரிசீலிக்கலாம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
No comments:
Post a Comment