சென்னை காவல்துறை மூன்றாகப் பிரிப்பு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, October 2, 2021

சென்னை காவல்துறை மூன்றாகப் பிரிப்பு

சென்னை, அக்.2- சென்னை மாநகரக் காவல்துறை மூன்றாகப் பிரிக்கப்பட்டுள்ளது. அதன்படிதாம்பரம், ஆவடி மாநகரக் காவல் ஆணையரகத்துக்கு சிறப்பு அதிகாரிகளை நிய மித்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.

இது தொடர்பாக, தமிழ்நாடு அரசின் உள்துறைச் செயலாளர் எஸ்.கே.பிரபாகர் வெளியிட்டுள்ள அறிவிப்பு வருமாறு:-

நிர்வாகம் (சென்னை) ஏடிஜிபியாகப் பதவி வகித்து வரும் எம்.ரவி, தாம்பரம் மாநகரக் காவல் ஆணையரகத்தின் சிறப்பு  அதிகாரியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார். அமலாக்கப் பிரிவு (சென்னை) ஏடிஜிபியாகப் பதவி வகித்து வரும் சந்தீப் ராய் ரத்தோர், ஆவடி மாநகரக் காவல் ஆணையரகத்தின் சிறப்பு அதிகாரியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார். பொருளாதாரக் குற்றத் தடுப்புப்பிரிவு (சென்னை) அய்ஜியாகப் பதவி வகித்து வரும் அபின் தினேஷ் மோதக், அடுத்த உத்தரவு வரும் வரை அப்பிரிவின் ஏடிஜிபி பொறுப்பையும் கூடுதலாகக் கவனிப்பார்.

No comments:

Post a Comment