‘மைக்ரோசிப்’ பற்றாக்குறை காரணமாக கார், அலைபேசி தயாரிப்பில் பாதிப்பு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, October 31, 2021

‘மைக்ரோசிப்’ பற்றாக்குறை காரணமாக கார், அலைபேசி தயாரிப்பில் பாதிப்பு

பெய்ஜிங், அக். 31- தற்போதைய எலக்ட்ரானிக் யுகத்தில் கார்கள் முதல் அலைபேசி கள் வரை அனைத்து பொருட்களின் இயக்கத் திலும்மைக்ரோசிப்எனப்படும் மின்னணு கருவி மிக முக்கிய பங் காற்றுகிறது. இந்த மைக் ரோசிப்களின் தேவைக்கு இந்திய நிறுவனங்கள் பெரும்பாலும் வெளி நாட்டு இறக்குமதியை நம்பியுள்ளன.

அதிலும் குறிப்பாக தைவான், சீனா, ஹாங் காங் ஆகிய நாடுகள் சிப்கள் உற்பத்தி மற்றும் ஏற்றுமதியில் முன்னணி யில் உள்ளன. இதற்கிடை யில் கரோனா ஊரடங் கின் காரணமாகவும், தைவா னில் ஏற்பட்ட வறட்சி காரணமாகவும் கடந்த ஒரு ஆண்டாக சிப்கள் உற்பத்தி வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் சிப்களுக்கு ஏற்பட்டுள்ள தட்டுப்பாடு காரணமாக முன்னனி கார் தயாரிப்பு நிறுவனங்களின் நிகர லாபம் வெகுவாக சரிந்து உள்ளது. மைக்ரோசிப் உற்பத்தியில் முன்னனி யில் உள்ள குவால்காம், இன்டெல் ஆகிய நிறுவ னங்கள் அடுத்த 4 மாதங் கள் முதல் ஒரு ஆண்டு வரை சிப்களின் பற்றாக் குறை தொடரும் என்று கூறியுள்ளன.

சில வகையான சிப்க ளுக்கு அடுத்த 2 ஆண்டு கள் வரை தட்டுப்பாடுகள் தொடர வாய்ப்புள்ளதா கவும் தயாரிப்பு நிறுவனங் கள் தெரிவித்துள்ளன. மேலும் 4ஜி ரக அலை பேசிகளுக்குள் பொருத் தப்படும் சிப்களுக்கும் பற் றாக்குறை ஏற்பட்டுள்ள தால், இவற்றின் உற்பத்தி யும் உலகெங்கும் பாதிக் கப்பட்டுள்ளது குறிப்பி டத்தக்கது.

No comments:

Post a Comment