சென்னை, அக். 31- ‘டால்பி விஷன், டால்பி அட் மோஸ்’ வசதிகளை உள்ளடக்கிய ‘பிலிப்ஸ் 4 கே யு.எச்.டி., - எல்.இ.டி., ஆண்ட்ராய்டு தொலைக் காட்சிகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.
இதன் வாயிலாக, டி.பி.வி.டெக்னாலஜி நிறுவனம், ‘ஸ்மார்ட் டிவி’ பிரிவை வலுப்படுத்த திட்டமிட்டுள்ளது. இந் தியாவில், தொலைக் காட்சி விற்பனை சிறப்பான முறை யில் அதிகரித்து வருகிறது. கரோனா தொற்றுக்கு பின், பொருளாதாரம் முன்னேற்ற பாதையில் செல்வதை அடுத்து, நடப்பு நிதியாண்டின் இரண்டாவது காலாண் டில், தொலைக் காட்சி விற்பனை 46 சதவீதம் வளர்ச்சி அடைந் துள்ளது.
ஒட்டுமொத்த தொலைக் காட்சி சந்தையில், ‘ஸ்மார்ட் தொலைக் காட்சி’ யின் பங்கு 80 சதவீதமாக உள்ளது. இதனால், ‘டிவி’ தயாரிப்பு நிறுவனங்கள், ‘ஸ்மார்ட் டிவி’களை அதிகம் தயாரித்து வரு கின்றன.
இதைத் தொடர்ந்து, டி.பி.வி., டெக்னாலஜி நிறுவனம், ‘டால்பி விஷன், டால்பி ஆட்மோஸ்’ கொண்ட பிலிப்சின் 4 கே யு.எச்.டி., - எல்.இ.டி., ஆண்ட்ராய்டு ‘டிவி’ களை அறிமுகம் செய்து உள்ளது.
பிலிப்ஸ் -- 8100 ‘டிவி’ சீரிஸ்கள், 55, 50, 43 திரை அளவுகளில் கிடைக்கின் றன. அவற்றின் விலை முறையே 89 ஆயிரத்து 990 ரூபாய்; 79 ஆயிரத்து 990 ரூபாய்; 59 ஆயிரத்து 990 ரூபாயாக உள்ளன.
இது குறித்து, டி.பி.வி., டெக்னாலஜி இந்தியா தலைவர் ஷைலேஷ் பிரபு கூறியதாவது: புதுமை களை வழங்கும் பிலிப்ஸ் ‘டிவி’யில் உள்ள, ‘ஆண்ட் ராய்டு 10 ஓ.எஸ்., டால்பி விஷன், டால்பி அட் மோஸ்’ போன்ற அம்சங் கள், வாடிக்கையாளர்க ளுக்கு தியேட்டர் அனுப வத்தை வீட்டிற்கு கொண்டு வரும். இவ்வாறு அவர் கூறினார்.
No comments:
Post a Comment