ஒன்றிய சுகாதாரத்துறை அமைச்சருக்கு ஆர்.எஸ்.பாரதி எம்.பி. கடிதம்!
சென்னை, அக்.1- தி.மு.க. அமைப்புச் செயலாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான ஆர்.எஸ். பாரதி ஒன்றிய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத் துறை அமைச்சர் மன்சுக் மாண் டவியா மற்றும் சட்டம் மற்றும் நீதித் துறை அமைச்சர் கிரண் ரிஜுஜு ஆகியோருக்கு, கோரிக்கை மனு ஒன்றை நேற்று (30.9.2021) அனுப்பியுள்ளார்.
அந்த மனுவில் அவர் கூறியிருப்ப தாவது :
2020 ஆம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் தி.மு.கழகம் சார்பில், அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு மாநில அரசுகளால் வழங்கப்படும் இடங்களில் மருத்துவக் கல்லூரிகளின் மாணவர் சேர்க்கையில் இதர பிற்படுத்தப்பட் டோருக்கு 50 சதவிகிதம் இடதுக்கீட்டை அமல்படுத்துவதற்கு உத்தரவிடக் கோரி ரிட் மனு எண்.8326 தாக்கல் செய் யப்பட்டதை நீங்கள் நன்கு அறிவீர்கள்.
இதர பிற்படுத்தப்பட்டோருக்கான ஒதுக்கீட்டை அமல்படுத்துவதற்கு ஆதரவாகத் தீர்ப்பளித்த பின், உயர்நீதி மன்ற முதல் அமர்வு 2020 ஆம் ஆண்டு ரிட் மனு எண்.8326-இன் மீது 27.7.2020இல் பிறப்பித்த உத்தரவில் இதர பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீடு அனுமதிக்கத்தக்கது என்று கூறியதுடன் ஒன்றிய அரசு 4 உறுப்பினர் குழு ஒன்றை அமைத்து 2021-2022 ஆம் கல்வி ஆண்டிலேயே அதனை அமல்படுத்தும் வகையில், அதனை அமல்படுத்துவதற்கான நடை முறைகளை மூன்று மாதத்திற்குள் தயாரித்து வழங்கும் படி கூற வேண்டும் என்றும் கூறியிருந்தது.
ஆனால், மேற்கண்ட அந்த உத்தரவு செயல்படுத்தப்படாததால் தி.மு. கழகம் சார்பில் அவதூறு வழக்கு (எண்.181 ஆஃப் 2021) ஒன்றைப் பதிவு செய்தது.
அதைத் தொடர்ந்து 19.7.2021 தேதியிட்ட உத்தரவு ஒன்றைப் பிறப்பித் தது. அதில் ஏற்கெனவே 29.7.2020 அன்று பிறப்பிக்கப்பட்ட உத்தரவு அடிப்படையில் 2021 - 2022 கல்வி ஆண்டிலிருந்து மருத்துவம் மற்றும் பல் மருத்துவப் படிப்புகளுக் கான அகில இந்திய இட ஒதுக்கீட்டுக்கு மாநிலங் களால் கையளிக்கப்பட்ட இடங்களில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 27 சதவிகித இட ஒதுக்கீடு வழங்கும்படி உத்தரவு பிறப்பித்தது. அதைத் தொடர்ந்து ஒன்றிய அரசு அனைத்து மாநிலங்களும் அகில இந்திய ஒதுக்கீட் டுக்கு வழங்கியுள்ள இடங்களில் இதர பிற்படுத்தப்பட்டோருக்கு 27சதவிகித இட ஒதுக்கீடு வழங்கப்படும் என்று அறிவித்தது.
அது 29.7.20212 அன்று பிறப்பிக்கப் பட்ட அறிவிக்கை மூலம் தெரிவிக்கப் பட்டது. மேலும், சுகாதாரம் மற்றும் குடும்ப நலத் துறை அமைச்சகமும் ஒப்புக் கொண்டது. இவ்வாறு இட ஒதுக்கீடு வழங்கப்படுவது நாடு முழுவதும் 4000 இதர பிற்படுத்தப்பட்ட பிரிவு மாணவர்களில் 4,000 பேருக்கும் உதவிகரமாகவும் இருக்கும்.
எனினும் சமீப காலங்களில் ஏராளமான ரிட் மனுக்கள் மேற்கண்ட 29.7.2021 தேதியிட்ட அறிவிக்கையை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டன.
இந்த ரிட் மனுக்கள் அனைத்தும் 07.10.2021 அன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகின்றன. மேற்கண்ட இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு 27 சதவிகித இடஒதுக்கீடு அளிக்கும் ஒன்றிய அரசின் கொள்கை முடிவை மாநில அரசுகளால் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு வழங்கப்பட்ட இடங் களில் அளிப்பதை ஒன்றிய அரசு ஆதரிக்க வேண்டும்.
ஒன்றிய அரசு தனது உயர் நிலையில் உள்ள சட்ட அலுவலரைக் கொண்டு ஆதரிக்க வேண்டும். அதன் மூலம் அந்த அறிவிக்கையை நிலை நாட்ட வேண் டும். இதில் உச்சநீதிமன்றம் எடுக்கும் முடிவு குரலற்ற மாணவர்களின் எதிர் காலத்தின்மீதும், இதர பிற்படுத்தப்பட் டோருக்கான இடஒதுக்கீட்டை உறுதி செய்ய தி.மு.கழகம் மேற்கொண்ட போராட்டம் மற்றும் முயற்சிகள்மீதும் நேரடித் தாக்கத்தை ஏற்படுத்தும்.
எனவே, இந்தப் பிரச்சினையில் சம்பந்தப்பட்டுள்ள முக்கியத்துவத் தையும், கட்டாய நிலையையும் கருத்தில் கொண்டு, அது நாடு முழுவதிலும் உள்ள இதர பிற்படுத்தப்பட்ட மாண வர்களின் எதிர்காலத்தைப் பாதிக்கப் படக் கூடியது என்பதால் ஒன்றிய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம் மற்றும் சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சகம் அறிவார்ந்த இந்திய அட்டர்னி ஜென ரலின் சேவையைப் பயன் படுத்தி மேலே குறிப்பிடப் பட்ட 29.7.2021 அறிவிக்கை மூலம் வெளியிடப்பட்ட ஒன்றிய அரசின் கொள்கை முடிவை ஆதரித்து வாதாடச் செய்யவும், அதன் மூலம் நாடு முழுவதும் உள்ள இதர பிற்படுத்தப் பட்ட மாணவர்களின் நலனைப் பாது காக்கவும் வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு மாநிலங்களவை உறுப் பினர் ஆர்.எஸ். பாரதி தனது கோரிக்கை மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
No comments:
Post a Comment