‘லிங்க்ட்இன்’ சேவையை சீனாவில் நிறுத்த ‘மைக்ரோசாப்ட்’ முடிவு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, October 17, 2021

‘லிங்க்ட்இன்’ சேவையை சீனாவில் நிறுத்த ‘மைக்ரோசாப்ட்’ முடிவு

புதுடில்லி, அக். 17- வேலை வாய்ப்புகள் சார்ந்த சமூக ஊடகமானலிங்க்ட்இன்சேவையை, சீனாவில் நிறுத்தப் போவதாக, அதை நடத்தி வரும்மைக்ரோசாப்ட்நிறு வனம் அறிவித்துள்ளது.

தொழில்நுட்ப நிறுவனங்கள் மீதான கட்டுப்பாட்டை சீனா கடுமையாக்குவதால், இந்த முடிவுக்கு வந்தி ருப்பதாக மைக்ரோ சாப்ட் தெரிவித்துள்ளது. சீனாவில் கடந்த 2014ஆம் ஆண்டில் மைக்ரோசாப்ட் நிறுவனம் லிங்க்ட்இன் சேவையை துவக்கியது. இந்நிலையில், அரசு அண் மைக் காலமாக பல்வேறு கட்டுப்பாடுகளை கொண்டுவருவதை அடுத்து, லிங்க்ட்இன் தன்னுடைய சேவையை நிறுத்திக் கொள்ளும் முடிவுக்கு வந்துள்ளது.

இது குறித்து, தொழில் நுட்ப பகுப்பாய்வு நிபு ணர் ஒருவர் கூறியதாவது: சீன அரசு அதன் மீதான விமர்சனங்களை இலகு வாக எடுத்துக்கொள்ளா மல், மிகவும் கடுமையா னதாக எடுத்துக்கொண்டு விடுகிறது. அதனால், இத் தகைய தகவல் பரிமாற்றங் களை நிறுத்த கடுமை யான முயற்சிகளில் இறங்கி விடுகிறது.

இந்நிலையில், லிங்க்ட் இன் போன்ற தகவல் பரிமாற்ற தயாரிப்புகளை சீனாவில் வெளியிடுவது என்பது சிரமமானதாக உள்ளது.இந்த தகவல் யுகத்தில் நீங்கள் எவ்வள வுக்கு எவ்வளவு தகவல் களை கட்டுப்படுத்த முனைகிறீர்களோ, அவ்வ ளவுக்கு மக்கள் அதை அடைய ஆக்கப்பூர்வமாக முயற்சிப்பார்கள் என் பதை சீன அரசு உணர வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.

பேஸ்புக்மற்றும்டுவிட் டர்ஆகியவை சீனா வில் தடை செய்யப்பட்டு, பத்து ஆண்டுகளுக்கு மேலாகி விட்டது. ‘கூகுள்நிறு வனம் 2010இல் சீனாவை விட்டு வெளியேறிவிட்டது.

No comments:

Post a Comment