மகளிர் சுய உதவிக் குழுக்கள் பழைய கம்பீரத்துடன் மீண்டெழும் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, October 1, 2021

மகளிர் சுய உதவிக் குழுக்கள் பழைய கம்பீரத்துடன் மீண்டெழும்

 முதலமைச்சர் மு..ஸ்டாலின் உறுதி

தருமபுரி, அக். 1- தமிழ்நாடு மகளிர் சுய உதவிக் குழுக்கள் விரைவில் பழைய கம்பீரத்துடன் மீண் டெழும் என தருமபுரி மாவட் டம் வத்தல்மலையில் நடந்த அரசு விழாவில் முதலமைச்சர் மு..ஸ்டாலின் தெரிவித்தார்.

வத்தல்மலை மலைக் கிரா மத்தில் பெரியூர் அருகிலுள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலைய வளாகத்தில் நேற்று (30.9.2021) மாலை பழங்குடியினர் மற்றும் விவசாயிகளுடன் தமிழ்நாடு முதலமைச்சர் கலந்துரையா டும் நிகழ்ச்சி நடந்தது.

இந்நிகழ்ச்சியில் முதல மைச்சர் மு..ஸ்டாலின் பழங் குடியின மக்கள் மற்றும் விவசாயிகளுடன் கலந்துரையாடிய துடன், வத்தல் மலை மலை கிராமத்துக்கு பேருந்து வசதி உள்ளிட்ட அவர்களின் கோரிக் கைகளையும் கேட்டறிந்தார். பல்வேறு துறைகளின் சார்பில் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

முன்னதாக, விழாவில் முத லமைச்சர் மு..ஸ்டாலின் பேசியது: வத்தல்மலை மலைக் கிராம பழங்குடி மக்களின் கோரிக்கைகளை கேட்டறியும் வாய்ப்புக்காக மகிழ்ச்சி அடை கிறேன். ‘கலைஞர் வருமுன் காக்கும் திட்டம்என்ற திட்டம் சேலத்தில் தொடங்கி வைக்கப்பட்டது. கடந்த திமுக ஆட்சியின்போதே செயல்பாட் டில் இருந்த திட்டம் தான் இது. மீண்டும் தற்போது திமுக ஆட்சி அமைந்துள்ள நிலை யில் அந்த திட்டத்துக்கு புத் தாக்கம் தரப்பட்டுள்ளது.

தற்போது தமிழ்நாட்டில் நடப்பது என் ஆட்சி அல்ல. நம் ஆட்சி, நம் எல்லோருக்கு மான ஆட்சி இது. மருத்து வத்தை தேடி மக்கள் சென்ற நிலையை மாற்றி, நோய் பாதிப் புக்கு உள்ளான ஏழை, எளிய வர்களை தேடி வீட்டுக்கே சென்று சிகிச்சை அளிக்கும் சூழலை இந்த ஆட்சி ஏற்படுத்தி உள்ளது.

தமிழ்நாட்டில் கரோனா தொற்று முழுமையாக அழிக் கப்படவில்லை என்றாலும் ஓரளவு கட்டுப்படுத்தி வைத் திருக்கிறோம். தேர்தலுக்கு முன்பு கட்சிகள் அளிக்கும் வாக்குறுதிகளை, வெற்றி பெற்றபின்னர் முழுமையாக நிறைவேற்றுகிறார்களா என தெரியாது. ஆனால், திமுக சார் பில் அளிக்கப்பட்ட 505 வாக் குறுதிகளில் 202 வாக்குறுதிகள் இதுவரை நிறைவேற்றப்பட்டு உள்ளன.

மரவள்ளி உழவர்கள், ஜவ்வரிசி உற்பத்தியாளர்களை சந்தித்து கோரிக்கைகள் கேட் டறியப்பட்டுள்ளது. அவர்க ளின் கோரிக்கையை படிப்படி யாக நிறைவேற்றித் தருவதாக உறுதி அளித்துள்ளோம். கண் டிப்பாக செய்து தருவோம்.

மக்களின் தேவையை அறிந்து அவற்றை நிறைவேற் றித் தரும் அரசுதான் திமுக அரசு. மகளிர் சுய உதவிக் குழுவை மேனாள் முதலமைச் சர் கலைஞர் தருமபுரி மாவட் டத்தில்தான் முதன் முதலில் தொடங்கி வைத்தார்.

அப்போது மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு முக்கி யத்துவம் அளிக்கப்பட்டு சுழல் நிதி, வங்கிக் கடன், மானியம் ஆகியவற்றை தொடர்ந்து வழங்கி மகளிர் சுய சார்புடன் வாழ வழி செய்யப்பட்டது. இடையில் 10 ஆண்டுகள் மகளிர் சுய உதவிக் குழுக்கள் பல சிரமங்களை எதிர்கொண் டன. மகளிர் சுய உதவிக் குழுக் கள் பழைய கம்பீரத்துடன் விரை வில் மீண்டெழும் வகையில் தமிழ்நாடு அரசுஅவற்றுக்கு முக்கியத்துவம் அளிக்க உள் ளது. இவ்வாறு பேசினார்.

பின்னர், தோட்டக்கலை துறை சார்பில், வள்ளல் அதிய மான் கோட்டம் வடிவில் காய்கறிகளைக் கொண்டு அமைக்கப்பட்டிருந்த கண் காட்சியை முதலமைச்சர் பார் வையிட்டார். இந்த நிகழ்ச்சி யில், மாவட்டஆட்சியர் திவ்யதர்சினி, தருமபுரி, பென் னாகரம் சட்டமன்ற உறுப்பி னர்கள் வெங்கடேஸ்வரன், கோ..மணிஉள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment