பயங்கரவாதிகளை ஆதரிக்க வேண்டாம் தலிபான்களுக்கு அமெரிக்கா கோரிக்கை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, October 31, 2021

பயங்கரவாதிகளை ஆதரிக்க வேண்டாம் தலிபான்களுக்கு அமெரிக்கா கோரிக்கை

வாசிங்டன், அக். 31- 'பயங்கர வாதிகளுக்கு ஆப்கன் அடைக்கலம் தரக் கூடாது' என, தலிபான் அரசிடம் இந்தியாவும், அமெரிக்கா வும் வலியுறுத்தியுள்ளன.

அமெரிக்கா - இந்தியா ஒருங்கிணைந்த பன்னாட்டு ஒத்துழைப்பு திட்டத்தின் கீழ் இரு நாடுகளைச் சேர்ந்த அதி காரிகள், பயங்கரவாத தடுப்பு நடவடிக்கைகள் குறித்து வாசிங்டனில் பேச்சு நடத்தினர். இரு நாட்கள் நடந்த இந்த கூட்டத்தை தொடர்ந்து கூட்டறிக்கை வெளியி டப்பட்டது.

அதில் கூறப்பட்டுள்ள தாவது: ஆப்கனில் அய்.நா., வால் தடை செய்யப்பட்ட அய்.எஸ்., லஷ்கர், ஜெய்ஷ் - - முகமது, அல் - குவைதா உள்ளிட்ட பயங்கரவாத அமைப்புகளுக்கு தஞ்சம் அளிக்கக் கூடாது. ஆப் கனில் பயங்கரவாதிக ளுக்கு பயிற்சி அளிப்பது, பயங்கரவாத அமைப்புக ளுக்கு நிதி திரட்டுவது உள்ளிட்ட நடவடிக்கை களை தலிபான் அரசு அனுமதிக்கக் கூடாது.

அமெரிக்காவும், இந்தியாவும் பயங்கரவாத தடுப்பு விவரங்களை தொடர்ந்து பரிமாறிக் கொள்வது என, கூட்டத் தில் முடிவு செய்யப்பட்டு உள்ளது. பயங்கரவாதத் திற்கு எதிரான போரில் இந்திய மக்கள் மற்றும் மத்திய அரசுடன் இணைந்து அமெரிக்கா செயல்படும். ஆப்கன் நிலவரம் மற்றும் அந்நாட்டில் இருந்து எழும் பயங்கரவாத அச் சுறுத்தல்கள் பற்றிய இந் தியா - அமெரிக்கா இடையிலான ஆலோசனை தொடரும்.

சட்ட விரோத பணப் பரிமாற்றம், ஆயுதங்கள் மற்றும் போதை மருந்து கடத்தல் ஆகியவற்றை தடுப்பது தொடர்பாக இரு நாடுகளின் அதிகாரி களும் கூட்டத்தில் விவா தித்தனர். சட்ட ஆலோச னைகள் மற்றும் குற்றவா ளிகளை நாடு கடத்துவது ஆகியவை குறித்தும் கூட் டத்தில் ஆலோசிக்கப்பட் டது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment