ஆலந்தூர், அக்.31 வேளச்சேரி இரண்டடுக்கு மேம்பாலத்தை நாளை (1.11.2021) முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார்.
சென்னை வேளச்சேரி விஜய நகரில் போக்குவரத்து நெரிசலை போக்கும் வகையில் வேளச்சேரி-தரமணி, வேளச்சேரி- கைவேலி சாலைகளை இணைக்கும் வகையில் ரூ.108 கோடியில் இரண்டடுக்கு மேம்பாலம் கட்டும் பணியை கடந்த 2016ஆம் ஆண்டு மறைந்த முதல மைச்சர் ஜெயலலிதா தொடங்கி வைத்தார்.
தரமணி சாலையில் இருந்து வேளச்சேரி விரைவு சாலை வரை 36 தூண்கள் அமைத்து பாலம் கட்டப்பட்டு உள்ளது.
இதன் மய்ய பகுதி 50 அடி உயரம் கொண்டது. அதேபோல் வேளச் சேரி விரைவு சாலையில் இருந்து தாம்பரம் சாலை வரை 17 தூண்கள் அமைத்து பாலம் கட்டப்பட்டு உள்ளது. இதன் மய்ய பகுதி 25 அடி உயரம் கொண்டது.
2 ஆண்டில் அனைத்து பணி களும் முடிய வேண்டியது. மேம்பால மய்ய பகுதியை ஒட்டி நில ஆர்ஜிதம் செய்ய வேண்டி இருந்தது.
இது தொடர்பான வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் நடந்தது. அதிகாரிகள், நில உரிமை யாளர்களிடம் பேச்சு நடத்தியும் பயனளிக்கவில்லை.
பின்னர் கடந்த ஆண்டு ஜூன் மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் 2 கட்டமாக 11 ஆயிரத்து 997 சதுர அடி பரப்பளவு இடம் கையகப் படுத்தப்பட்டது.
சட்டப்பேரவை தேர்தலுக்கு முன் தரமணி- - வேளச்சேரி விரைவு சாலை வழித்தடத்தை திறக்க முடிவு செய்யப்பட்டது.
பருவ மழை, கரோனா போன்ற காரணங்களால் பணி முடிய
வில்லை.
இந்த நிலையில் அனைத்து பணிகளும் முடிந்த நிலையில் தரமணி- - வேளச்சேரி விரைவு சாலை வழித்தடத்தை நவம்பர் 1ஆம் தேதி, நாளை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் திறந்து வைக்க உள்ளார்.
மேம் பாலத்தில் மாநகராட்சி சார்பில் ரூ.45 லட்சத்தில் 82 கம்பங்கள் நட்டு மின்விளக்குகள் அமைக்கப் பட்டுள்ளன.
ஒரு வழித்தடம் திறக்கப் படுவதால் வேளச்சேரி விஜயநகர் சந்திப்பு, தண்டீஸ்வரம் நகர், காந்தி சாலை பகுதியில் வாகன நெரிசல் கணிசமாக குறையும் என கூறப் படுகிறது.
No comments:
Post a Comment