புதுடில்லி. அக் 10 உயர்நீதிமன்றங் களுக்கு 23 நீதிபதிகளை நியமிக் கும் பரிந்துரைக்கு உச்சநீதிமன்ற கொலிஜியம் ஒப்புதல் வழங்கி உள்ளது. அதன்படி, சென்னை உயர்நீதிமன்றத்துக்கு வழக்குரை ஞர் ஜெ.சத்தியநாராயண பிரசாத் நீதிபதியாக நியமிக்கப்படும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
தமிழ்நாடு உள்பட 6 மாநிலங் களில் உள்ள உயர்நீதிமன்றங்க ளுக்கு 23 நீதிபதிகள் தொடர்பாக நியமிப்பது ஆய்வு செய்யப்
பட்டு பரிந்துரைக்கப்பட்டது. அதன்படி, ராஜஸ்தான் உயர்நீதி மன்றத்துக்கு, 4 வழக் குரைஞர் களும், ஒரு நீதிசார் அலுவலரும் நீதிபதிகளாக பரிந்துரைக் கப்பட்டிருந்தனர். அதற்கு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தலைமையிலான கொலிஜியம் ஒப்புதல் அளித்துள்ளது.
சென்னை உயர்நீதிமன்றத் துக்கு வழக்குரைஞர் ஜெ.சத்தி யநாராயண பிரசாத் நீதிபதியாக நியமிக்கப்பட பரிந்துரைக்கப்பட் டி ருந்தது.
மேலும், அலகாபாத் உயர்நீதி மன்றத்துக்கு ஒரு வழக்குரைஞர், உயர்நீதிமன்ற நீதிபதியாகவும், கருநாடகா உயர் நீதிமன்றத்துக்கு 4 வழக்குரைஞர்களை நீதிபதி களாக நியமிக்கும் பரிந்துரை மற்றும், கொல்கத்தா உயர்நீதிமன் றத்துக்கு இரு வழக்குரைஞர்களை நீதிபதிகளாக நியமிக்கும் பரிந் துரைகளுக்கு கொலிஜியம் ஒப்புதல் அளித் துள்ளது.
அதுபோல பஞ்சாப்- அரி யானா உயர்நீதிமன்றத்தில் பணி யாற்றிவரும் 10 கூடுதல் நீதிபதி களை நிரந்தர நீதிபதிகளாக நிய மிக்கும் பரிந்துரைக்கும் கொலி ஜியம் ஒப்புதல் அளித்துள்ளது.
No comments:
Post a Comment