விண்வெளி நிலையத்துக்கு வீரர்களை அனுப்பிய சீனா - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, October 17, 2021

விண்வெளி நிலையத்துக்கு வீரர்களை அனுப்பிய சீனா

பீஜிங், அக். 17- பன்னாட்டு விண்வெளி நிலையத்தை அமெரிக்காவின் நாசா, ரஷ்யா, ஜப்பான், அய்ரோப்பா, கனடா ஆகியவை இணைந்து அமைத்துள்ளன. அங்கு விண் வெளி வீரர்களை அனுப்பி ஆய்வு மேற்கொண்டு வருகிறார்கள்.

இதற்கிடையே சீனா சொந்த மான விண்வெளி நிலையத்தை அமைக்க முடிவு செய்தது. இதற் கான பணிகளை மேற்கொண்ட சீனா, ராக்கெட்டுகள் மூலம் விண் வெளி நிலையம் அமைப்பதற்கான தளவாடங்களை விண்வெளிக்கு சில மாதங்களுக்கு முன்பு அனுப் பியது.

கடந்த ஏப்ரல் மாதம் முதல் விண்வெளி குழுவினரை விண் வெளிக்கு சீனா அனுப்பியது. அவர் கள் 3 மாதங்கள் தங்கி விண்வெளி நிலையத்தை அமைப்பதற்கான பணிகளை செய்து விட்டு பூமிக்கு திரும்பினர்.

இந்த நிலையில் சீனா 3 விண் வெளி வீரர்களை மீண்டும் தனது விண்வெளி நிலையத்துக்கு அனுப் பியது. லாங்கு மார்ச்-2 எப் ராக்கெட் மூலம் ஜாய் ஜிகாங், வாங் யாப்பிங், யே குவாங் பு ஆகிய 3 வீரர்களும் விண்வெளிக்கு முதல்முறையாக சென்றனர். இதில் ஒரு பெண் வீராங்கனையும் அடங்குவார்.

இந்த ராக்கெட் ஜிகுவான் ஏவுதளத்தில் இருந்து ஏவப்பட்டது. ஏவப்பட்ட 10 நிமிடங்களில் விண் கலம் தனியாக பிரிந்து புவி வட்டப் பாதையில் நுழைந்தது. விண்கலம் சுமார் ஆறரை மணி நேர பயணத் துக்கு பிறகு  சீனாவின் விண்வெளி நிலையத்தை வெற்றிகரமாக சென் றடைந்தது. விண்வெளி நிலையத் துடன் இணைந்த பிறகு 3 வீரர் களும் அதற்குள் சென்றனர்.

3 விண்வெளி வீரர்களும் விண் வெளி நிலையத்துக்கான அடுத்தக் கட்ட பணியில் ஈடுபடுவார்கள். அவர்கள் 6 மாதங்கள் விண்வெளி யில் தங்கி இருப்பார்கள் என்றும் விண்வெளி நிலையத்தை விரிவுப் படுத்துவதற்கான கருவிகளை நிறுவ அவர்கள் விண்வெளி நடை பயணங்களை மேற்கொள்வார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment