மத்தியப் பிரதேசம் கவுர் நகரத்திற்கு அருகில் உள்ள ஒரு கிராமத்தில் உயர்ஜாதியைச் சேர்ந்த சகபள்ளித்தோழியுடன் பேசியதற்காக தாழ்த்தப்பட்ட பள்ளிச்சிறுமி மற்றும் அவரது சகோதரன் முகத்தில் கரியைப் பூசி, செருப்பு மாலையிட்டு ஊர்வலமாக அழைத்துசென்று அவமானப்படுத்தியுள்ளனர்.
இதை அப்பகுதி காவலர் ஒருவர் வேடிக்கைப் பார்த்து தடுக்கத் தவறிவிட்டார்.
இதனை அடுத்து இந்த ஜாதிய தாக்குதல் தொடர்பாக காவல்துறை ஆணையர் ஒரயா செப்மானி ஊடகத்தினரிடம் பேசும் போது, இந்த நிகழ்வு தொடர்பாக இருவரை கைதுசெய்துள்ளோம் கடமை தவறிய காவலர் மீது விசாரணை நடத்தி உள்ளோம். இந்த குற்ற நிகழ்வு பள்ளி நிர்வாகத்தின் முன் நடைபெற்றுள்ளது, இருந்த போதும் அவர்கள் இதை தடுக்கத்தவறியுள்ளனர். அவர்களையும் விசாரணைக்கு அழைத்துள்ளோம்” என்று கூறினார்.
No comments:
Post a Comment