சென்னை,அக்.17- நீதிமன்றங் களில் இனி மனுக்களை தாக்கல் செய்ய பச்சை நிற லீகல் அளவு காகிதம் தேடி அலைய வேண்டிய தில்லை. வெள்ளை நிறஏ4 காகிதத்தில் மனுக்களை தாக்கல் செய்தால் போதும் என உயர்நீதி மன்ற பதிவுத் துறை உத்தரவிட் டுள்ளது.
சென்னை உயர் நீதிமன்றம், உயர் நீதிமன்ற மதுரை கிளை உள்ளிட்ட தமிழ்நாடு, புதுச் சேரியில் உள்ள அனைத்து கீழமை நீதிமன்றங்களிலும் பிரமாண பத்தி ரங்கள், பிராதுகள், ஆவணங்கள், உத்தரவுநகல்கள், வக்காலத்து நாமா மற்றும் பதில் மனுக்களை தாக்கல் செய்ய 100 ஜிஎஸ்எம் தரம் கொண்ட பச்சை நிற ஃபுல்-ஸ்கேப் லீகல் காகிதத்தில் மட்டுமே பயன்படுத்தப்பட்டு வந்தது.
பொதுவாக நீதிபதிகள் படிப் பதற்காக தாக்கல் செய்யப்படும் பிரமாணப் பத்திரங்கள், மனுக்கள் மற்றும் ஆவணங்கள் அனைத்தும் பச்சை நிற லீகல் அளவு காகிதங் களிலும், பிரதிவாதிகளுக்கான மனுக்கள் வெள்ளை நிற காகிதங் களிலும் தாக்கல் செய்யப்படுவது வழக்கம். தற்போது இந்த நடை முறையில் மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளது.
அதன்படி உரிமையியல் நடை முறை சட்டம் - 1908, பிரிவு 122இன்கீழ் உரிமையியல் விதிகளுக் கான தொழில் நெறி பயிற்சி மற்றும் சுற்றறிக்கைக்கான உத்தர வுகள் - விதி 6-இல் சில திருத்தங்களை தமிழ்நாடு அரசின் அனுமதியுடன் சென்னை உயர்நீதிமன்றம் கொண்டு வந்துள்ளது. இந்த திருத் தங்கள் குறித்த அறிவிப்பாணை தமிழ்நாடு அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது.
அதன்படி உயர் நீதிமன்ற தலைமை பதிவாளர் பி.தனபால் அனைத்து நீதிமன்றங்களுக்கும் பிறப்பித்த உத்தரவில், ‘நீதிமன்றங் களில் தாக்கல் செய்யப்படும் அனைத்து பிராதுகள், எழுத்துப் பூர்வமான வாதங்கள், மனுக்கள், பிரமாணப் பத்திரங்கள், மேல் முறையீட்டு மனுக்கள் இனி 75 ஜிஎஸ்எம் கொண்ட வெள்ளை நிற ஏ4 காகிதத்தில் தாக்கல் செய்தால் போதும். முன்பக்கம் மற்றும் பின்புற பக்கங்களில் மனுக்களை தாக்கல் செய்யும்போது அதற்கான பக்கங்களை நம்பர் களில் குறிப்பிட வேண்டும். மேல் முறையீட்டு மற்றும் அசல் வழக்குகளுக்கான ஆவணங்களை தாக்கல் செய்யும்போது ஏ4 சைஸ் காகிதத்தின் மேல்புறம் மற்றும் அடிப்பக்கத்தில் இருந்து 2.5 செமீ அளவுக்கும், இடது புறத்தில் 3 செமீ அளவுக்கும், வலது புறத்தில் 2.5 செமீ அளவுக்கும் மார்ஜின் விட வேண்டும்’ என்று அறிவுறுத்தி யுள்ளார்.
No comments:
Post a Comment