* மலேசியா - தைப்பிங் நகரில் தமிழ் இலக்கியத்திற்கு வளம் சேர்த்து - தைப்பிங் தமிழ்ச் சங்கத் தின் தலைவராகப் பல ஆண்டுகள் பணியாற்றி - 'விடுதலை' ஏட்டின் நெடுநாள் வாசகராகத் திகழ்ந்து வந்த தமிழ்ச்சீலர் மா.செ.மாயதேவன் நேற்று (30.9.2021) மறைவுற்றார் என்பதை அறிந்து வருந்துகிறோம்.
* இந்திய கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த வழக்குரைஞர் - பகுத்தறிவுத் தோழர் என்.சந்திரசேகரன் (வயது 65) 29.9.2021, அன்று பகல் 1.40 மணிக்கு மறைவுற்றார் என்பதை அறிந்து வருந்து கிறோம். 1.10.2021 காலை 8 மணிக்கு செம்பியம் - பெரவள்ளூரிலுள்ள இல்லத் தில் வைக்கப்பட்டிருந்த உடலுக்கு செம்பியம் கழக தலைவர் பா.கோபால கிருட்டிணன் மாலை வைத்து இறுதி மரியாதை செலுத்தினார். வடசென்னை மாவட்ட செயலாளர் தி.செ.கணேசன், துணைத் தலைவர் கி.இராமலிங்கம், பாவேந்தர் பகுத்தறிவுப் பாசறைத் தலைவர் ஓவியர் கிருபா, செம்பியம் கழக செயலாளர் டி.ஜி.அரசு, என்.டி.சீனிவாசன் ஆகியோரும் இறுதி மரியாதை செலுத்தி அன்னாரது குடும்பத்தாருக்கு ஆறுதல் கூறினர்.
No comments:
Post a Comment