பார்த்தாலே தீமை ஏற்பட்டுவிடுகிறதாம் பெண்ணை நிர்வாணப்படுத்தி தாக்கிய அவலம்
போபால், அக்.9- பாஜக ஆளும் மத்தியப்பிரதேச மாநிலத்தில் தீய பார்வை கொண்டவர் என கூறி அப்பெண்ணைப் பார்த்தாலே தீமை ஏற்பட்டு விடுகிறது எனும் மூடநம்பிக்கை காரணமாக 45 வயது பெண்ணை நிர்வாணப் படுத்தி தாக்கியுள்ளனர். தார் மாவட்டத்தை சேர்ந்த மாண்ட்வி என்ற கிராமத்தில் கடந்த 5.10.2021 அன்று பலர் முன் னிலையில் அப்பெண்ணை நிர் வாணப்படுத்தி, அடித்து உதைக் கும் காட்சிப்பதிவு சமூக ஊட கங்களில் பலராலும் பகிரப்பட்டு வைரலானது.
அந்த பெண்ணின் தீய பார் வையால் அவரது உறவினர்கள் திடீர் நோய்களால் பாதிக்கப்பட் டார்கள் எனும் மூடநம்பிக்கை யால், அப் பெண்ணின் உறவி னர்களே அவரை நிர்வாணப் படுத்தி, முடியைப்பிடித்து இழுத்து அடித்து உதைத்துள்ளனர்.
இத்தாக்குதலில் ஈடுபட்டவர் களில் மூவர் கைது செய்யப்பட் டுள்ளனர். தலைமறைவான ஒரு வரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.
No comments:
Post a Comment