கேள்வி: ‘ஜாதி வேறுபாடுகளைக் களையும் வகையில் ஒரே மயானத்தைப் பின்பற்றும் கிராமங் களுக்கு, 10 லட்ச ரூபாய் ஊக்கத் தொகை வழங்கப் படும்' என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு குறித்து...?
பதில்: சுடுகாட்டிலாவது ஜாதி ஒழியுமா என்று பரிசோதனை செய்ய, ஊக்கத்தொகை கொடுக்கும் அளவுக்கு நலிந்துவிட்டது - ஜாதியை ஒழிக்கப் புறப்பட்ட திராவிடம்.
(‘துக்ளக்', 6.10.2021, பக்கம் 30)
சிந்தனை: ‘ஹிந்துக்களே ஒன்று சேருங்கள்' என்று பார்ப்பனர்கள் கூறுவது எல்லாம் சுத்த பம்மாத்து. சுடுகாட்டில் கூட ஜாதி ஒழியக் கூடாது என்கிற கூட்டம்தான் - தங்களுக்கு ஆள் பலம், அடி யாட்கள் பலம் தேவை என்று வரும்போது மட்டும் ஹிந்துக்களே ஒன்று சேருங்கள் என்பார்கள். அந்த ஹிந்துக்களை ஒன்று சேர்த்து சங்கர மடத்தில் கூட்டம் போடுவார்களா?
No comments:
Post a Comment