பலத்த மழையால் தரைப்பாலம் நீரில் மூழ்கியது - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, October 17, 2021

பலத்த மழையால் தரைப்பாலம் நீரில் மூழ்கியது

ஆற்று வெள்ளத்தில் சிக்கிய பக்தர்களை தீயணைப்பு வீரர்கள் மீட்டனர்

நெல்லை,அக்.17 பலத்த மழை காரணமாக தரைப் பாலம் தண்ணீரில் மூழ் கியது. வெள்ளத்தில் சிக்கி தவித்த  800 பேரை தீய ணைப்பு வீரர்கள் கயிறு கட்டி பத்திரமாக மீட் டனர்.

நெல்லை மாவட்டம் களக்காடு புலிகள் காப் பகத்துக்கு உட்பட்ட திருக்குறுங்குடி மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ள  திருமலை நம்பி கோவிலில் வாரம்தோறும் சனிக்கிழமைகளில் கூட் டம் அலைமோதும்.

இந்த நிலையில் கரோனா 2-ஆவது அலை பரவல் காரணமாக கடந்த ஏப்ரல் மாதம் முதல் நம்பி கோவிலுக்கு செல்ல  தடை விதிக்கப்பட் டது. தற்போது வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமை களிலும் வழிபாட்டு தலங் களுக்கு அரசு அனுமதி அளித்ததை தொடர்ந்து நம்பி கோவிலுக்கு செல் லவும்  வனத்துறையினர் அனுமதி வழங்கினர்.

பல மாதங்களுக்கு பிறகு கோவிலுக்கு செல்ல அனுமதி அளிக்கப்பட்ட தாலும், புரட்டாசி மாத கடைசி சனிக்கிழமை என்பதாலும் நேற்று (16.10.2021) அதிகாலை முதலே ஏராளமானோர் நம்பி கோவிலுக்கு வந் தனர்.

15.10.2021 அன்று முதலே மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பலத்த மழை பெய்தது. ஆனாலும் அதையும் பொருட்படுத் தாமல் பக்தர்கள் சாரை சாரையாக கோவிலுக்கு வந்தனர்.

இந்தநிலையில், நேற் றும் தொடர்ந்து கனமழை பெய்த நிலையில் நம்பி யாறு மற்றும் கால்வாய் களில் திடீரென வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. திருக்குறுங்குடியில் இருந்து  நம்பி கோவிலுக்கு செல்லும் வழியில் சப்பாத்து என்ற இடத்தில் நம்பியாற்றின் குறுக்கே உள்ள தரைப்பாலத்தை வெள்ளம் மூழ்கடித்தபடி சென்றது.

இதனால் நம்பி கோவி லுக்கு சென்ற பக்தர்கள் அனை வரும் வெள்ளத்தில் சிக்கி திரும்பி வர முடி யாமல் தவித்தனர். பலர் கரையோரத்தில் நின்ற படி செய்வதறியாது திகைத்தனர். இதுகுறித்து தகவல் அறிந்ததும் வனத் துறையினர், காவல்துறையினர் தீயணைப்பு படையினர் அங்கு விரைந்தனர்.

வெள்ளத்தில் சிக்கித் தவித்தவர்களை மீட்க உடனடி நடவடிக்கையில் இறங்கினர்.  கயிறு கட்டி பத்திரமாக மீட்டனர். வெள்ளத்தில் சிக்கிய மொத்தம் 800-க்கும் மேற் பட்ட பக்தர்கள் மீட்கப் பட்டனர்.

No comments:

Post a Comment