பாஜக மக்களவை உறுப்பினர் வருண்காந்தி எச்சரிக்கை
புதுதில்லி, அக்.13- லக்கிம்பூர் கெரியில், போராட்டம் நடத்திய விவசாயிகள் மீது, ஒன்றிய பாஜக அமைச்சரின் மகன் ஆசிஷ் மிஸ்ரா, காரை ஏற்றி தாக்குதல் நடத்தி யதில் 4 பேர் உயிரிழந்தனர்.
பாஜக நாடாளுமன்ற உறுப் பினர் இருந்த போதும், இந்த சம்பவம் தொடர்பாக, வருண் காந்தி தொடர்ந்து தனது கண் டனத்தைத் தெரிவித்து வருகிறார்.
இந்நிலையில், உத்தரப் பிரதேச விவசாயிகள் போராட் டத்தை இந்து _- சீக்கியர் இடையிலான கலவரமாக மாற்ற முயற்சி செய்வதாக, பெய ரைக் குறிப்பிடாமல் பாஜகவை வருண் காந்தி விமர்சித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் தனது சுட்டுரைப் பக்கத்தில் குறிப் பிட்டிருப்ப தாவது: “லக்கிம்பூரில் நீதி கேட்டு, ஏழை விவசாயிகள் நடத்திய போராட்டமா னது, ஒரு ஆணவம் மிக்க உள்ளூர் உயர் அதிகார வர்க்கம் நிகழ்த்திய கொடூரமான படுகொலைக்கு எதிரா னது. அதற்கு மத அர்த்தம் இல்லை.
இந்நிலையில், போராடும் விவசாயிகளுக்கு எதிராக இழி வான கீழ்த் தரமான மொழியைப் பயன்படுத்து வது நியாயமற்றது கொடூரமானது.
போராடும் விவசாயிகள் என்ன சொல்கிறார்கள் என் பதைப் புரிந்து கொள்வதற்குப் பதிலாக, நாம் அவர்களுக்கு எதிராக மோசமான மொழியைப் பயன்படுத்த ஆரம்பிக்கிறோம். ‘போராடும் விவசாயிகளை ‘காலிஸ்தானி’ என்று அழைப்பது, நமது எல்லைகளில் போராடி ரத்தம் சிந்திய இந்த பெருமைமிக்க மகன்களின் தலைமுறையினரை அவம திப்பதாகும். அதுமட் டுமல்ல. இது நமது தேசிய ஒற் றுமைக்கு மிகவும் ஆபத்தானதும் ஆகும். இது தவறான எதிர் வினைகளையும் ஏற்படுத்தும்.
லக்கிம்பூர் கெரி விவகாரத்தை இந்து _- சீக்கியர் இடையேயான போராட்டமாக மாற்ற முயற்சி நடக்கிறது. இது ஒழுக்கக் கேடானது மட்டுமின்றி தவ றானதும் ஆகும். ஒரு தலைமுறை, மறக்க நினைக்கும் காயங்களை மீண்டும் கிளறுவது ஆகும்.'' இவ்வாறு வருண் காந்தி குறிப்பிட்டுள்ளார்.
No comments:
Post a Comment