சென்னை, அக்.17 மழலையர் பள்ளிகள் திறப்பு குறித்து விரைவில் தெளிவான அறிக்கை வெளியிடப் படும் என பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ்
தெரிவித்துள்ளார்.
நவம்பர்1-ஆம் தேதி முதல் மழலையர் மழலையர் மற்றும் அங்கன்வாடி பள்ளிகள் திறப்பதற்கு அனுமதி அளித்து தமிழ்நாடு அரசு உத்தரவு
வெளியிடப்பட்டது.
இந்நிலையில், தற்போது இது குறித்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:- பள்ளிக்கு வரும் மாணவர்களை ஆசிரியர்கள் துன்புறுத்தக்கூடாது. பாகுபாடு காட்டக் கூடாது. மாணவர்களை துன்புறுத்தும் ஆசிரியர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மழலையர் பள்ளி திறப்பு குறித்த அறிவிப்பு தவறுதலாக வந்துள்ளது. மேலும், முதலமைச்சர் ஆலோசனையில் அங்கன்வாடி குழந்தைகளுக்கு சத்துணவு கொடுப்பது பற்றி தான் விவாதித்தோம். மழலையர் பள்ளிகள், அங்கன்வாடி பள்ளிகள் எப்போது திறக்கப்படும் என்பது குறித்த தெளிவான அறிக்கை விரைவில் வெளியிடப்படும் என்றார்.
No comments:
Post a Comment