ஆவடி கழக மாவட்டம் செம்பரம்பாக்கத்தில் புதிய மாணவர்களுடன் சந்திப்பு! பெரியார், அம்பேத்கர் பற்றிக் "கேட்டலும், கிளத்தலும்!" - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, October 30, 2021

ஆவடி கழக மாவட்டம் செம்பரம்பாக்கத்தில் புதிய மாணவர்களுடன் சந்திப்பு! பெரியார், அம்பேத்கர் பற்றிக் "கேட்டலும், கிளத்தலும்!"

ஆவடி, அக். 30, ஆவடி கழக மாவட்டம், பூவிருந்தவல்லியில் உள்ள செம்பரம்பாக்கம் பகுதியில், புதிய மாணவர்களுடன் சந்திப்பு நடைபெற்றது. திராவிட மாணவர் கழக மாநில செயலாளர் .பிரின்சு என்னாரெசு பெரியார் கலந்து கொண்டு மாணவர்களின் கேள்விகளுக்குப் பதிலளித்தார்.

மாநில சட்டக் கல்லூரி மாணவர் கழக துணை அமைப்பாளர் செ.பிரவீன் குமார் மூலமாக அறிமுகமான செம்பரம்பாக்கம் தோழர் ஹரிஷ், ஆவடி மாவட்டக் கழகத்துக்குக் கொடுத்த தகவலின் பேரில், 3-10-2021 அன்று மாலை 5 மணிக்கு புதிய மாணவர்களுடனான சந்திப்புக்கு மாவட்டக் கழகம் ஏற்பாடு செய்திருந்தது. இந்நிகழ்வு புதிய மாணவர்களின் அய்யங்களை போக்கு கின்ற வகையில், 'கேட்டலும், கிளத்தலும்' நிகழ்ச்சியாக, பூவைப் பகுதித்தலைவர் ..பெரியார் மாணாக்கன் தலைமையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. சிறப்பு அழைப்பாளராக, .பிரின்சு என்னாரெசு பெரியார் அழைக்கப்பட்டிருந்தார். ஆவடி மாவட்ட அமைப்பாளர் உடுமலை வடிவேல், செம்பரம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த தி.மு.. தோழர் சாமுண்டி, சென்னை மண்டல மாணவர் கழக செயலாளர் .. வேலவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். அப்பகுதியில் உள்ள நூலகத்தில் அனுமதி பெற்று, நிகழ்வு ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது. புதிய மாணவர் ஹரீஷ் அனைவரையும் வரவேற்றுப் பேசினார்.

 மாநில சட்டக் கல்லூரி மாணவர் கழக துணை அமைப்பாளர் செ.பிரவீன் குமார் நிகழ்வை ஒருங்கிணைத்தார். இறுதியில் தோழர் பிரபு நன்றி கூறி நிகழ்வை நிறைவு செய்தார்.

கேள்விகளுக்கு முன்னதாக, .பிரின்சு என்னாரெசு பெரியார் தந்தை பெரியார்,  அண்ணல் அம்பேத்கர் இருவரும் ஏன் நமக்குத் தேவைப் படுகிறார்கள் என்பது பற்றி விரிவாகப் பேசினார். அதைத் தொடர்ந்து மாணவர்கள் தங்களின் அய்யங்களை ஒவ்வொருவராக எழுப்பி, உரிய பதில்களைப் பெற்றனர்.

தி.மு.. பிரமுகர் சாமுண்டி சில கேள்விகளுக்கு தெளிவாக பதில்களைக் கூறினார்.

முன்னதாக மாணவர்கள் ஜாதி குறித்த அவரவர்களின் அனுபவங்களைப் பகிர்ந்து கொண்ட போது, சென்னையில் உள்ள சில அரசுப் பள்ளிகளில் ஜாதிக் கொடுமைகளுக்கு மாணவர்கள் ஆளாகி இருப்பதைத் அறிந்து கொண்டதும் அதிர்ச்சியாக இருந்தது. நிகழ்வில் பொறியியல், சட்டம், கலை அறிவியல் பயிலும் 20 மாணவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

இந்நிகழ்வில்  கழக இளைஞரணித் தோழர் பூவை வெங்கடேசன், ஆவடி மாவட்ட மாணவர் கழகத் தலைவர் பூவை செ.பெ.தொண்டறம், பெரம்பூர் பா.பார்த்திபன் மற்றும் உள்ளூர் மக்கள் சிலரும் கலந்து கொண்டனர்.

நிகழ்வின் முடிவில் தந்தை பெரியார் அவர்களின் 143ஆவது பிறந்த நாளை முன்னிட்டு,  கலந்துகொண்ட மாணவர் களுக்கு மரக்கன்றுகள் வழங்கப்பட்டன.


No comments:

Post a Comment