பீஜிங், அக்.1 சீனாவில் கடந்த ஓரிரு மாதங்களாக மீண்டும் கரோனா தொற்று பரவி வருகிறது.
உலகில் முதன் முதலாக சீனாவில் கடந்த 2019 ஆம் ஆண்டு இறுதியில் கரோனா தொற்று கண்டறியப்பட்டது. தற்போது அமெரிக்கா, இந்தியா உள்ளிட்ட நாடுகள் கரோனாவுடன் போராடிக் கொண்டிருக்க, சீனா கரோனாவை கட்டுக்குள் கொண்டுவந்துவிட்டது.
இந்த நிலையில் சீனாவில் மீண்டும் கரோனா தலைக்காட்டத் துவங்கியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் சீனாவில் புதிதாக 25 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் 11 பேருக்கு உள்ளூரில் இருந்தே தொற்று பரவல் ஏற்பட்டுள்ளது கண்டறியப்பட்டுள்ளது.
அதே சமயம் அங்கு கரோனா பாதிப்பு காரணமாக கடந்த 24 மணி நேரத்தில் உயிரிழப்புகள் எதுவும் ஏற்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அறிகுறி இல்லாத தொற்று பாதிப்புகளை உறுதி செய்யப்பட்ட பாதிப்பாக சீன சுகாதாரத்துறை அறிவிப்பதில்லை. அந்த வகையில் 19 பேருக்கு அறிகுறி இல்லாத கரோனா தொற்று உறுதியாகியிருப்பதாகவும் கூறப்படுகிறது.
இந்த புதிய பாதிப்புகளின் மூலம் சீனாவில் இதுவரை கரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 96,106 ஆக உயர்ந்துள்ளது. அதே சமயம் கரோனாவால் அங்கு இதுவரை 4,636 பேர் உயிரிழந்திருப்பது குறிப்பிடத்தக்கது.
தாய்லாந்தில் கனமழை 70 ஆயிரம் வீடுகள் வெள்ளத்தில் மூழ்கின
பாங்காக், அக்.1 தாய்லாந்தில் கனமழையால் 70 ஆயிரம் வீடுகள் வரை நீரில் மூழ்கி உள்ளன. 7 பேர் வரை உயிரிழந்து உள்ளனர்.
தாய்லாந்தில் கனமழையில் இருந்து தப்பிக்க வீட்டு கூரைகளில் தஞ்சமடைந்த மக்களை மீட்கும் பணியில் வீரர்கள் ஈடுபட்டு வருகின்றனர். ஏறத்தாழ 30 மாகாணங்களை டியான்மு சூறாவளி தாக்கிய நிலையில் வரலாறு காணத அளவுக்கு கனமழை கொட்டித் தீர்த்தது. கனமழையால் 70 ஆயிரம் வீடுகள் வரை நீரில் மூழ்கி உள்ளன. நாட்டின் வடக்கு மற்றும் மத்திய மாகாணங்களில் இதுவரை 7 பேர் வரை உயிரிழந்து உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் வெள்ளத்தில் தத்தளிக்கும் மக்களை ரப்பர் படகுகள் கொண்டு மீட்கும் பணியில் மீட்புக் குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர்.
No comments:
Post a Comment