சிதம்பரம், அக்.13 சிதம்பரம் கழக மாவட்டம் காட்டுமன்னார்குடி ஒன்றியம் இராஜேந்திர சோழகன் (தெற்கிருப்பு) கிராமத்தை சேர்ந்த முன்னாள் சிதம்பரம் கழக மாவட்ட கழக தலைவர் ஜெ.கி.அருள்ராஜ் உடல்நலக்குறைவால் மறை வுற்றதை யொட்டி அவர்தம் நினைவேந்தல் நிகழ்வு 06.10.2021 அன்று காலை 11மணிக்கு தெற்கிருப்பு உதவிபெறும் துவக்கப் பள்ளியில் நடைபெற்றது.
ஜெ.கி.அருள்ராஜ் அவர்கள் படத்தை பகுத்தறிவாளர் கழகப் பொறுப்பாளர் தலைமை ஆசிரியர் அ.செங்குட்டுவன் திறந்து வைத்தார். உறவினர்கள், நண்பர்கள் மரியாதை செலுத்தினர்.
இந்நிகழ்வில் அவர்தம் துணைவி யார் பூங்குழலி அருள்ராஜ், மகள் துவாரகா, அ.நம்பூதிரி, பெரியதுரை, ஜெ.கி. அருண்பிரசாத், இந்திரா காந்தி, தமிழினியன்,தமிழறிவாளன், அரவிந்த்எழில், கழக ஒன்றிய செயலாளர் ஆ.ஆனந்த பாரதி, கமல பாரதி, அ.சங்கர், கணேஷ் ஜெ.இரவிச்சந்திரன், தியாகராஜன், மணிவண்ணன், அ.அம்பலவா ணன், பரிமேலழகன், மாதவன், மற்றும் உறவினர்கள் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment