சென்னை, அக்.31 ஒன்றிய அரசின் வேளாண்மை உள்கட்டமைப்பு நிதி திட்டத்தில் யார்-யார் பயன் பெறலாம்? என்பது குறித்து தமிழ்நாடு அரசு விளக்கம் அளித்துள்ளது.
இதுதொடர்பாக தமிழ்நாடு அரசு 29.10.2021 அன்று வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-
விவசாயிகள் உற்பத்தி செய்த விளைப்பொருட்களை வீணாக்காமல் கிராம அளவில் ஒன்றுசேர்ந்து மதிப் புக் கூட்டி, விவசாயிகளுக்கு லாப கரமான விலை கிடைப்பதை உறுதி செய்வதற்கும், வேளாண் வளர்ச்சிக் கும் கிடங்குகள், தரம்பிரிப்பு மய் யங்கள், குளிர்சாதன கிடங்குகள் போன்ற உள்கட்டமைப்பு களை வலுப்படுத்துவது மிகவும் அவசி யமானதாகும். இத்தகைய உள்கட்ட மைப்புகளுக்காக பல்வேறு திட்டங் களில் கீழ் ஒன்றிய, மாநில அரசுகள் மானியம் வழங்கி வருகின்றன.
உழவர் - உற்பத்தியாளர்
எனவே, கிராம அளவில் உள்கட் டமைப்புகளை வலுப்படுத்த முன் வரும் விவசாயிகள், உழவர் உற்பத் தியாளர் நிறுவனங்களுக்கு வட்டி மானியத் துடன் கடன் வசதி செய்து தருவதற்காக, வேளாண் உள்கட் டமைப்புக்கான நிதி எனும் திட்டத் தினை ஒன்றிய அரசு அறிவித்துள்ளது.
இந்த நிதி திட்டத்தின் மூலம் அதிகபட்சமாக ரூ.2 கோடி வரை கடன் பெறலாம். வங்கிகள் விதிக்கும் வட்டி விகிதத்தில் 7 ஆண்டு காலத்துக்கு ஆண் டுக்கு 3 சதவிகிதம் வட்டி தள்ளுபடி செய்யப்படும். ரூ.2 கோடிக்கு மேல் கடன் பெற்றால், ரூ.2 கோடிக்கு மட்டும் 3 சதவிகித வட்டி தள்ளுபடி செய்யப் படும். மேலும் ரூ.2 கோடி வரை உள்ள கடன்களுக்கான கடன் உத்தரவாதமும் வழங்கப்படுகிறது.
சுய உதவிக் குழுக்கள்
விவசாயிகள், உழவர் உற்பத்தி யாளர் அமைப்புகள், சுயஉதவிக் குழுக்கள், கூட்டுப் பொறுப்புக் குழுக்கள், தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு கடன் சங்கங்கள், விற்பனை கூட்டுறவு சங்கங்கள், வேளாண் தொழில்முனை வோர், புதியதாக தொழில் தொடங்க முன்வரும் நிறு வனங்கள், ஒன்றிய-மாநில அமைப் புகள் அல்லது உள்ளாட்சி அமைப் புகளால் முன்மொழி யப்படும் அரசு, தனியார் பங்கேற்புடன் கூடிய அமைப் புகள், மாநில முகமைகள்-வேளாண் விளைபொருட்கள் விற்பனைக் குழுமங்கள், தேசிய மற்றும் மாநில கூட்டுறவு சங்கங்களின் கூட்ட மைப்புகள், உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களின் கூட்டமைப்புகள், சுய உதவிக் குழுக்களின் கூட்ட மைப்புகள் இத்திட்டத்தின் கீழ் கடன் வசதி பெற இயலும்.
தகுதியுடைய பயனாளி நிறுவனம் தனியார் அமைப்பை சார்ந்து இருந் தால், அதிகபட்சமாக 25 வேறுபட்ட இடங்களில் வேளாண் உள்கட்ட மைப்பை ஏற்படுத்துவதற்கு கடன் வசதி பெற முடியும். மாநில முகமைகள், தேசிய-மாநில கூட்டுறவு கூட்டமைப் புகள், உழவர் உற்பத்தியாளர் அமைப் புகள், சுயஉதவி குழுக்களின் கூட்ட மைப்புகளுக்கு இந்த கட்டுப்பாடு இல்லை. வேளாண் விளைபொருட்கள் விற்பனை குழுக்கள், ஒன்றுக்கு மேற் பட்ட உள்கட்டமைப்புகளுக்கான திட் டங்களை, அனுமதிக்கப்பட்ட பகுதி களில் செயல்படுத்தலாம். ஒவ் வொரு திட்டத்திற்கும் அதிகபட்சமாக ரூ.2 கோடி வரை கடன் வசதி பெற முடியும்.
இத்தகைய வேளாண் உட்கட்ட மைப்புகளை உருவாக்குவதற்கு தேவைப்படும் கடன் தொகையை வழங்குவதற்காக, அகில இந்திய அளவில் 25 பட்டியலிடப்பட்ட வணிக வங்கிகள், ஒன்றிய அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளன. அதன்படி, இத்திட்டத்தின் கீழ் பெறப் படும் கடனுக்கான வட்டி விகிதம் அதிகபட்சமாக ஆண்டுக்கு 9 சதவீதம் மட்டுமே. வேளாண் உள்கட்டமைப்பு நிதித்திட்டத்தின் கீழ், 3 சதவிகிதம் வட்டி தள்ளுபடியில் கடன் பெறலாம். இது தொடர்பாக, கூடுதல் விவரங்கள் என்ற இணையதள முகவரியில் தெரிந்து கொள்ளலாம்.
தமிழ்நாட்டில், 2020_-2021 முதல் 2032_20-33 வரை, ரூ.5 ஆயிரத்து 990 கோடி அளவுக்கு இந்த திட்டத்தின் கீழ் கடன் வசதி தந்து, வேளாண் உள்கட் டமைப்புகளை உருவாக்குவ தற்கு அரசு திட்டமிட்டுள்ளது. அரசின் பல்வேறு திட்டங்களின் மானியத்தையும் இணைந்தே பெற்றுக் கொள்ளும் வசதி இத்திட்டத்தில் உள்ளதால், அரசு அறிவித்துள்ள வட்டி தள்ளுபடியுடன் இந்த கடன் வசதியை பெற விரும்பும் நபர்கள் தங்கள் திட்டத்திற்கான விபரங் களுடன் அருகில் உள்ள வேளாண்மை, தோட்டக்கலை, வேளாண் விற்பனை, வேளாண் பொறியியல் துறை அலு வலர்களையோ, வங்கி மேலாளர்கள் அல்லது நபார்டு வங்கியின் மாவட்ட வளர்ச்சி மேலாளர்களையோ தொடர்பு கொண்டு பயன் அடையலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment