லண்டன், அக். 31- இங்கிலாந்து நாட்டின் கார்டிப் பல் கலைக்கழகத்தில் 2-ஆம் ஆண்டு மருத்துவக்கல்வி பயின்று வந்த மாணவி மாரெட் ப்லூகஸ் (21). இவர் 3-ஆம் ஆண்டு செல் வதற்கான தேர்வை எழு தியுள்ளார். அதில், 39 சத விகிதம் எடுத்து தோல்வி யடைந்துள்ளார். அதனை தொடர்ந்து மறுதேர்வு எழுதியுள்ளார்.
அந்த தேர்வுக்கான முடிவு இமெயில் மூலம் அனுப்பப்பட்டுள்ளது. அதில், மாரெட் ப்லூகஸ் மறுதேர்விலும் தோல்வி யடைந்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், மறுதேர்வில் மாரெட் 62 சதவிகிதம் எடுத்து தேர்ச்சியடைந்து உள்ளார்.
ஆனால், பல்கலைக் கழகத்தால் இமெயில் மூலம் அனுப்பப்பட்ட தேர்வு முடிவு தவறானது என்பதை அறியாத மாணவி மாரெட் ப்லூகஸ் மிகுந்த கவலையில் இருந்துள் ளார். மன உளைச்சல் அதிகரித்த நிலையில், மேம்பாலத்தில் இருந்து ஆற்றில் குதித்து மாணவி மாரெட் ப்லூகஸ் தற் கொலை செய்து கொண் டுள்ளார் என்பது குறிப் பிடத்தக்கது.
No comments:
Post a Comment