மும்பை, அக்.1 ரிலையன்ஸ் அறக் கட்டளை மற்றும் பன்னாட்டு முன் னேற்றத்திற்கான யுஎஸ். முகமை ஆகியவற்றால் தொடங்கப்பட்டிருக்கும் விமன் கனெக்ட் சேஞ்ச் இந்தியா வழியாக, நிதி உதவி பெறுபவர்களாக இந்தியா முழுவதிலுமிருந்து 10 அமைப்புகள் தேர்ந்தெடுக்கப்பட்டிருக் கின்றன.
இந்த முனைப்புத்திட்டத்தின் வழி யாக பாலினம் சார்ந்த டிஜிட்டல் இடைவெளியை நிரப்புவதற்கு உதவ, ரூபாய் 11 கோடிக்கும் அதிகமான தொகை முதலீடு செய்யப்பட்டிருக்கிறது.
இதில், இப்பிரச்சினைக்கு புதுமை யான தீர்வுகளை உருவாக்குவதற்கான செயல் திட்டங்களுக்கு 8.5 கோடி ரூபாய் நிதி ஆதரவை ரிலையன்ஸ் ஃபவுண்டேஷன் வழங்கியிருக்கிறது.
பாலின ரீதியிலான டிஜிட்டல் இடைவெளியை நிரப்புவதற்கான இந்த திட்டங்களிலிருந்து 3 லட்சத்திற்கும் அதிகமான பெண்களும், சிறுமிகளும் பயனடைவார்கள்.
தொழில் நுட்பத்தின் வழியாக பெண்களின் பொருளாதார திறனதி காரம் பெறும் நிலையை இது அதி கரிக்கும் என இந்நிறுவன தலைவர் எம்.நீட்டா தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment