வாசிங்டன், அக்.1 வியாழன் கோளின் ட்ரோஜன் விண்கற்களை ஆய்வு செய்ய இருக்கும் முதல் விண்கலமான லூசியை வருகிற மாதம் 16ஆம் தேதி விண்ணில் ஏவ நாசா திட்டமிட்டுள்ளது.
இந்த சிறுகோள்களை பற்றி ஆராய்வதன் மூலம், நமது சூரிய மண்டலத்தின் கிரகங்கள் 4.5 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு எப்படி உருவானது, அவற்றின் தற்போதைய கட்டமைப்பிற்கு எப்போது மாறினது என்பது பற்றி அறிந்து கொள்ள முடியும் என விஞ்ஞானிகள் நம்புகின்றனர்.
இது குறித்து லூசி திட்ட விஞ்ஞானி டாம் ஸ்டாட்லர், லூசி மூலம் இதுவரை பார்த்திராத எட்டு விண்கற்களுக்கு நாங்கள் 12 ஆண்டுகளில் செல்கிறோம். நமது சூரிய மண்டலத்தின் கடந்த காலத்தை பற்றிய ஆராய்ச்சிக்கு இந்த விண்கலம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று கூறினார்.
அக்டோபர் தொடக்கத்தில், இணைக்கப்பட்ட விண்கலம் கேப் கனாவெரல் விண்வெளி நிலையத்திற்கு கொண்டு செல்லப்படும், அங்கு அது யுனைடெட் லாஞ்ச் அலையன்ஸ் அட்லஸ் வி 401 ராக்கெட்டுடன் இணைக்கப்படும். அதன் பின்பு ராக்கெட் பூமியின் வளிமண்டலத்திற்கு வெளியே ட்ரோஜன் விண்கற்களை நோக்கிய நீண்ட பயணத்தைத் தொடங்கும்.
No comments:
Post a Comment