சென்னை, அக்.17 ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் உள்ளாட்சி தேர்தல் நடத்தை விதிகள் விலக்கிக் கொள்ளப்பட்டதால் ஆட்சியர் அலுவலகங்களில் நாளை (18.10.201) முதல் மக்கள் குறைதீர்வு கூட்டம் நடைபெற உள்ளது.
வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தல் இரண்டு கட்டங்களாக கடந்த 6 மற்றும் 9ஆம் தேதிகளில் நடை பெற்றது. உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பு கடந்த மாதம் 13ஆம் தேதி வெளியான நிலையில் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்தன. அதன்படி, அரசின் மக்கள் நலன் சார்ந்த திட்டங்கள், நிகழ்ச்சி கள் நடைபெற தடைவிதிக்கப் பட்டது.
இதற்கிடையில், கரோனா தொற்றுப்பரவல் அச்சம் காரண மாக தடை விதிக்கப்பட்டிருந்த மக் கள்குறைதீர்வு கூட்டம் மீண்டும் நடத்த அரசு அனுமதி அளித்தது.
ஆனால், தேர்தல் நடத்தை விதிகள் காரணமாக வேலூர் உள்ளிட்ட 3 மாவட்ட ஆட்சியர் அலுவலகங் களில் மட்டும் மக்கள் குறைதீர்வு கூட்டம் ரத்து செய் யப்பட்டது.
மற்ற மாவட்டங்களில் மக்கள் குறைதீர்வு கூட்டம் நடைபெற்று வருகிறது.
இதற்கிடையில், ஊரக உள் ளாட்சி தேர்தல் முடிந்து முடிவுகள் வெளியான நிலையில் தேர்தல் நடத்தை விதிகளை மாநில தேர்தல் ஆணையம் விலக்கிக் கொண் டுள்ளது. அதன்படி, ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் இனி வரும் நாட்களில் அரசு விழாக்கள், நிகழ்ச்சிகள் நடைபெற தடையில்லை. எனவே, நாளை (அக்.18) முதல் ஆட்சியர் அலுவலகங்களில் மக்கள் குறை தீர்வு கூட்டம் வழக்கம்போல் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர்கள் குமாரவேல் பாண்டி யன் (வேலூர்), அமர் குஷ்வாஹா (திருப்பத்தூர்), பாஸ்கர பாண் டியன் (ராணிப்பேட்டை) ஆகி யோர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், ‘‘மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் வரும் திங்கட் கிழமை (நாளை) முதல் மக்கள் குறைதீர்வு கூட்டம் நடைபெறும். கரோனா விதிகளை கடைபிடித்து பொதுமக்கள் மனு அளிக்க வேண்டும். இதில், அனைத்துத்துறை அதிகாரிகள் பங்கேற்பார்கள்’’ என தெரிவித்துள்ளனர்.
No comments:
Post a Comment