மதம் ஒன்றையே தாங்கும் பா.ஜ.க.வினரால் மக்களுக்கு நன்மை என்ன? - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, October 17, 2021

மதம் ஒன்றையே தாங்கும் பா.ஜ.க.வினரால் மக்களுக்கு நன்மை என்ன?

மானமிகு ஆசிரியர், தமிழர் தலைவர் அவர்களுக்கு வணக்கம்,

'விடுதலை' நாளிதழ் அக்டோபர் 14 அன்று வெளியான 'பூட்டை உடைத்து கோயில் தரிசனமா' தலை யங்கம் வாசித்தேன், இச்செய்தியை படித்தவுடன் நினைவுக்கு வந்தது பா... இந்து முன்னணி வகைய றாக்கள் தான் என அய்யமில்லாமல் வெளிப்பட்டது. காரணம் இதுபோன்ற வன்முறைகள் தானே அவர்களின் இருப்பு.

கரோனா நோயை கட்டுப்படுத் துவதற்காகத்தான் வாரக் கடைசி மூன்று நாட்களில் வழிபாட்டு தலங் களுக்கு தடைவிதித்தது தமிழ்நாடு அரசு. இது ஏதோ தனிமனித வழி பாட்டிற்கு,  குறிப்பிட்டமத வழிபாட் டிற்கு எதிரானதல்ல என தெரிந்தும் பா... வகையறாக்கள் குய்யோ, முறையோ எனகூச்சலிடுகின்றன.

ஆக்கப் பொறுத்தவன் ஆறப் பொறுக்கக்கூடாதா என்ற சொல வடைக்கேற்ப பா...வினரால் பொறுக்க முடியாமல், இப்படி ஒரு குறுக்கு கோணல் புத்திக்காரர்களின் அடாவடி, வன்முறை.

பூட்டு என்பது தடுப்புக்காகத் தான், அந்த பூட்டை உடைப்பது என்பது திருட்டுக்கு ஒப்பாகும். வன்முறையை ஏவும் திருட்டு - இதை

பா... கும்பல் மறைமுகமாக செய் திருக்கிறது.

இன ஈன மலரோ வேண்டுதலை நிறைவேற்ற முடியாத விரக்தி என தலைப்பு போடுகிறது. கோயிலில் களவு நடந்தால் இன ஈனமலர் என்ன செய்தி வெளியிட்டிருக்கும். ஆனால் அது கண்களுக்கு தெரியவில்லை. பூட்டை உடைத்தது விரக்தி என செய்தி போடும் இன ஈனமலரே, இதே நிகழ்வு வணிக நிறுவனத்திலோ, இல்லங்களிலோ நடந்திருந்தால் இப்படி செய்தி வெளியிடுமா?

வன்முறை, ஆபாசம் இவை களின் பிறவி தான் இந்துமதமும், அதைத் தூக்கிப் பிடிக்கும் இன ஈன மலரும்.அதைத்தான் இந்த பூட்டு உடைப்பு நிகழ்வு மெய்ப்பிக்கிறது.

பாபர் மசூதியையே இடித்த இந்த வன்முறைக் கும்பலுக்கு  ஒரு பூட்டை உடைப்பது எம்மாத்திரம்.

நாகர்கோவில் பூட்டு உடைப்பு விவகாரத்தில் ஈடுபட்டவர்களின் செயலை ஏதோ விரக்தி என கருதாமல், அரசு நடைமுறையை மீறி வன்முறையில் செயல்பட்டதாக கருதி கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். கோயிலை திறக்கா விட்டால் பூட்டு உடைப்பு தமிழ்நாடு முழுவதும் நடக்கும் என செய்தி வெளியிட்டு வன்முறையை தூண் டும் இன ஈன மலரின் மீதும் நட வடிக்கை அவசியம்.

நாட்டில் எவ்வளவோ பிரச் சினைகள் இருக்க மதம் ஒன்றையே தாங்கிப் பிடிக்கும் பா...வினரால் மக்களுக்கு நன்மை தரக்கூடிய வகையில் செயல்படாமல் இது போன்ற வன்முறை நிகழ்வுகள் தலை குனிவு, வெட்ககேடு!

புரட்சிக் கவிஞரின் 'இருட்டறை யில் உள்ளதடா  உலகம் 'என்ற வரிகள் பா... ஆட்சிக்குப் பொருந்தும். 

- மு.சு. அன்புமணி,  மதுரை

No comments:

Post a Comment