சேலம், அக். 16- 17.9.2021 அன்று காலை 9 மணியளவில் சேலம் மத்திய மாவட்ட திமுக செயலாளரும், சட்டமன்ற உறுப்பினருமான இராசேந்திரன் தந்தை பெரியார் சிலைக்கு மாலை அணிவித்தார்.
திராவிட கழக மாணவர் கழக மண்டலச் செயலாளர் தமிழர் தலைவர் அனைவருக்கும் இனிப்புகளை வழங்கினார்.
காலை 10 மணியளவில் சேலம் மாவட்டத் தலைவர் ஜவகர் தலைமையில் மாவட்டச் செயலாளர் அ.ச.இளவழகன், சிந்தாமணியூர் சுப்பிரமணியம், மண்டலத் தலைவர் மேட்டூர் மாவட்ட தலைவர் கிருட்டிணமூர்த்தி, தலைமை செயற்குழு உறுப்பினர் பழனி.புள்ளையண்ணன், சேலம் மாநகரத் தலைவர் இளவரசன், மாவட்ட அமைப்பாளர் இராவண பூபதி ஆகியோர் மாலை அணிவித்தனர். மாநகரச் செயலாளர் பா.வைரம், வெற்றிச்செல்வன், அட்சயா, மகளிரணி கமலம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
சேலம் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.ஆர்.பார்த்திபன் அவர்களால் அவரின் அலுவலகத்தின் வெளியே தந்தை பெரியார் படம் 143 அடியில் மிகப்பிரமாண்டமாக வைக்கப்பட்டு, விழாக் கோலம் பூண்டது. கரகாட்டம், ஒயிலாட்டம், பறை இசையுடன் தந்தை பெரியார் 143ஆவது பிறந்த நாளை முன்னிட்டு 200 நபர்களுக்கு நலத்திட்ட உதவியாக தையல்மிசின், மாற்றுத் திறனாளிகளுக்கு மூன்று சக்கர சைக்கிள் போன்றவற்றை நாடாளுமன்ற உறுப்பினர் அவர்களின் சொந்த செலவில் வழங்கி, மிக பிரம்மாண்டமான முறையில் விழாவை கொண்டாடினார்கள்.
அனைவருக்கும் காலை உணவும், இனிப்பும் வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் மாவட்டத் தலைவர் கே.ஜவகர், மாவட்டச் செயலாளர் அ.ச.இளவழகன், பூபதி, இளவரசன், கமலம், அட்சயா ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
No comments:
Post a Comment