திருவையாறு ஸ்டாலின் முத்தரசன் - அஞ்சுகம் மணவிழா வரவேற்பு தமிழர் தலைவர் ஆசிரியர் காணொலியில் வாழ்த்துரை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, October 1, 2021

திருவையாறு ஸ்டாலின் முத்தரசன் - அஞ்சுகம் மணவிழா வரவேற்பு தமிழர் தலைவர் ஆசிரியர் காணொலியில் வாழ்த்துரை

திருவையாறு, அக்.1- திருவையாறு சுயமரியாதை சுடரொளி துரையரசன் - அன்னப்பூர்ணம் இணையரின் மகன் திருவையாறு ஒன்றிய திராவிடர் கழக செயலாளர் துரை.ஸ்டாலின் முத்தரசன், வலப்பக்குடி இராமலிங்கம் - புஷ்பவள்ளி இணையரின் மகள் அஞ்சுகம் ஆகியோரின் வாழ்க்கை இணையேற்பு வரவேற்பு விழா 19.9.2021 அன்று மாலை 6.30 மணியளவில் நடுக்கடை ஜமாத் சமுதாய திருமண மகாலில் நடைபெற்றது.

திருவையாறு ஒன்றியத் தலைவர் .கண்ணன் அனைவரையும் வரவேற்று உரையாற்றினார். தஞ்சை மாவட்ட திராவிடர் கழக தலைவர் வழக்குரைஞர் சி.அமர்சிங் நிகழ்விற்கு தலைமை வகித்து வாழ்த்துரையாற்றினார். கழகப் பொதுச்செயலாளர் இரா.ஜெயக்குமார், மாநில அமைப்பாளர் இரா.குணசேகரன், காப்பாளர் வெ.ஜெயராமன், மண்டலத்தலைவர் மு.அய்யனார், மாவட்டச் செயலாளர் .அருணகிரி, மாநில .. தலைவர் மா.அழகிரிசாமி, மாநில கிராமபிரச்சாரக்குழு அமைப்பாளர் முனைவர் அதிரடி .அன்பழகன் உறுதிமொழி கோவிந்தராசு, மாவட்ட விவசாய அணி தலைவர் வலப்பக்குடி இரா.பாலசுப்ரமணியன், மாநில .. துணைத்தலைவர் கோபு.பழனிவேல் உள்ளிட்டோர் வாழ்த்துரையாற்றினார்கள். தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் காணொலியில் வாழ்த்துரை வழங்கினார். ஸ்டாலின் முத்தரசன் அவர்களின் தந்தையார் துரையரசன் சிறப்புகள், மணமகன் ஸ்டாலின் அவர்களின் செயல்பாடுகள் குறித்து உரையில் குறிப்பிட்டார். இறுதியாக மணமகனின் சகோதரர் இளம்பிருகு துரையரசன் நன்றி கூறினார்.

நிகழ்வில் மாநில இளைஞரணி துணைச் செயலாளர் இரா.வெற்றிக்குமார்,  மாணவர் கழக அமைப்பாளர் செந்தூரபாண்டியன் மண்டல இளைஞரணி செயலாளர் வெ.இராஜவேல், முகமதுபாரூக், பேச்சாளர் பெரியார்செல்வம், மண்டல மகளிரணி செயலாளர் .கலைச்செல்வி, மாவட்ட தொழிலாளரணி அமைப்பாளர் ஏகாம்பரம், தஞ்சை தெற்கு ஒன்றிய செயலாளர் இராமலிங்கம், பெரியார் வீரவிளையாட்டு கழக செயலாளர் நா.இராமகிருஷ்ணன், தஞ்சை மாநகரத் தலைவர் பா.நரேந்திரன், திருமானூர் ஒன்றியத் தலைவர் சிற்றரசு, ஒன்றிய செயலாளர் கோபிநாத், பூதலூர் ஒன்றியத் தலைவர் இரா.பாலு, ஒன்றிய செயலாளர் புகழேந்தி, பெரியார் நகர் உத்திராபதி, திருவையாறு ஒன்றிய அமைப்பாளர் கவுதமன், விவேகவிரும்பி தமிழரசன், ஓவியர் புகழேந்தி, உரத்தநாடு மாரிமுத்து, ரெ.ரஞ்சித்குமார், மதுரகவி, மோகன்ராஜ், தஞ்சை வடக்கு ஒன்றிய செயலாளர் .அரங்கராசன், மாவட்ட துணைச்செயலாளர் சந்துரு, அஞ்சுகம் சந்துரு, திருவையாறு கவுதமன், செல்வகுமரன், திருமானூர் மைனர் உள்ளிட்ட உறவினர்கள், நண்பர்கள், கழகத் தோழர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

பெரியார் உலகம் நிதி, விடுதலை சந்தா

மணவிழா மகிழ்வாக திருச்சி சிறுகனூரில் அமையவுள்ள பெரியார் உலகம் நிதியாக ரூ. 10,000, இரண்டு ஆண்டு விடுதலை சந்தா ரூ. 3600, மணமக்கள் துரை.ஸ்டாலின்முத்தரசன் - அஞ்சுகம் ஆகியோர் கழகப் பொதுச்செயலாளர் இரா.ஜெயக்குமார் அவர்களிடம் வழங்கினர்.

No comments:

Post a Comment