சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள மதுராந்தகம் ஏரிக்கரையில் விதிமுறையை மீறி பேருந்து நிறுத்தம் இரண்டு பக்கங்களிலும் செயல்பட்டு வருகிறது. ஆனால் அந்த சாலைக்கு இடது பக்கத்தில் மதுராந்தகம் பேருந்து நிலையம் உள்ளது. பெரும்பாலும் பொதுமக்கள் அந்த பேருந்து நிலையத்தை பயன்படுத்தாமல் அங்கே அமைக்கப்பட்டுள்ள படிகளின் வழியாக மேலே ஏறி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள பேருந்து நிறுத்தத்தில் வந்து ஏறி இறங்குகின்றனர்.
இதனால்
அடிக்கடி போக்குவரத்து பாதிக்கப் படுவதுடன் விபத்து
ஏற்படவும் வாய்ப்புள்ளது.
குறிப்பாக
சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்கும் அதேபோல தென் மாவட்டங்களில் இருந்து சென்னைக்கும் சொந்த வாகனங்களில் பயணிப்பவர்கள் வரக்கூடிய வேகத்தை கட்டுப்படுத்த முடியாத நிலை ஏற்பட்டு இன்னலுக்கு ஆளாகின்றனர். கடந்த வாரம் நாங்கள் பயணித்த போது இதை நேரில் அனுபவித்து உணர்ந்தோம்.
எனவே
தமிழ்நாடு நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் உடனடியாக இதை கவனத்தில் கொண்டு அசாதாரண சூழலை தவிர்த்து பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்பார்க்கிறோம்.
தி.என்னாரெசு பிராட்லா,
காரைக்குடி
No comments:
Post a Comment