நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:
· எல்லைப் பாதுகாப்புப் படைக்கு அதிக அதிகாரங்களை வழங்குவதற்கான ஒன்றிய அரசின் நடவடிக்கை குறித்து கடும் கவலையை வெளிப்படுத்திய காங்கிரஸ், மற்ற அரசியல் கட்சிகள் மற்றும் மாநில அரசுகளுடன் கலந்தாலோசித்து, அதன் மீதான உத்தரவை ரத்து செய்ய மோடி அரசை நிர்ப்பந்திக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளது.
தி டெலிகிராப்:
· இந்தியா ஒரு ஜனநாயக நாடாக கருதப்படுவதில்லை என்றும், “தேர்தல் எதேச்சதிகாரம்“ என்ற முத்திரையைப் பெற்றுள்ளது என்றும், மோடி அரசாங்கத்தை உறுதியுடன் எதிர்க்க அனைத்து ஜனநாயகக் கட்சிகளும் கைகோர்க்க வேண்டும் என காங்கிரஸ் மத்திய நிர்வாகக் குழுவில் முடிவு.
· ஒன்றிய அரசு வேளாண் சட்டங்களுக்கு எதிரான போராட்டத்தை உணர்திறனுடன் கையாள வேண்டும், பெரும்பாலான போராட்டக்காரர்கள் பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்தவர்கள் என தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் எச்சரிக்கை.
டைம்ஸ் ஆப் இந்தியா:
· சித்தாந்த ரீதியாக காங்கிரஸ் கட்சி தலைவர்கள் செயல்பட ராகுல் காந்தி வேண்டுகோள்.
· தனது தொகுதி வளர்ச்சித் திட்டங்களை வரைவதில் தன்னுடன் இணைந்து பணியாற்றுவதற்கான வாய்ப்பை இளைஞர்களுக்கு வழங்கிடும் திட்டத்தை கரூர் மக்களவைத் தொகுதி உறுப்பினர் ஜோதிமணி துவக்கியுள்ளார்.
- குடந்தை கருணா
No comments:
Post a Comment