மதுரை,அக்.13- மதுரையில் பெரி யாரியல் பயிற்சி பெற்ற திராவிட நாற்று களுடன் கலந்துரையாடல், சான்றிதழ் வழங்கும் விழா மற்றும் சுயமரியாதைச் சுடரொளிகள் சொக்கலிங்க நகர் சோ.இராமமூர்த்தி & பீபிகுளம் நவநீதன் ஆகியோரின் படத்திறப்பு ஆகிய நிகழ்வுகள் 25.09.2021 சனிக்கிழமை காலை 10 மணியளவில்,மதுரை யானைக் கல்லில் உள்ள எஸ்.ஏ.எஸ்.பழக்கடை அரங்கில் நடைபெற்றது.
நிகழ்விற்கு மதுரை மாநகர் மாவட்ட திராவிடர் கழகத்தலைவர் அ.முருகா னந்தம் தலைமை தாங்கினார்.அனை வரையும் வரவேற்று மாநகர் மாவட்ட துணைச்செயலாளர் இரா.லீ.சுரேசு உரையாற்றினார். நிகழ்வுக்கு திராவிடர் கழக தென்மாவட்ட பிரச்சாரக்குழு செயலாளர் தே.எடிசன்ராசா,மதுரை மண்டலத்தலைவர் கா.சிவகுருநாதன், மண்டலச்செயலாளர் ந.முருகேசன் ,விருதுநகர் மாவட்ட செயலாளர் தி.ஆதவன் ஆகியோர் முன்னிலை வகித் தனர்.
நிகழ்வின் தொடக்கத்தில் புரட்சிக் கவிஞர் பாடலை பெரியார் பிஞ்சு நன்னன் அழகுபாண்டியும்,தந்தை பெரி யார் பற்றிய பாடலை பெரியார் பிஞ்சு மகாமதி சுரேசும் பாடினர்.
படத்திறப்பு
மதுரை மாநகர் மாவட்ட திராவிடர் கழகத்தில் பல ஆண்டுகள் பணியாற்றி அண்மையில் மறைந்த தோழர் சொக்கலிங்க நகர் சோ.இராமமூர்த்தி அவர்களின் படத்தினை, அவரது இணையர் மற்றும் அவரது குடும்பத்தினர் உடன் இருக்க திராவிடர் கழக மாநில வழக்குரைஞர் அணித் துணைத்தலைவர் வழக்குரைஞர் நா.கணேசன் திறந்து வைத்து உரையாற்றினார்.
அதனைப் போல தோழர் பீபிகுளம் நவநீதன் படத்தினை அவரது இணையர் மற்றும் அவரது குடும்பத்தினர் உடன் இருக்க திராவிடர் கழக மாநில வழக் குரைஞர் அணிச்செயலாளர் வழக்கு ரைஞர் மு.சித்தார்த்தன் திறந்துவைத்து உரை யாற்றினார்.
மாநில அமைப்புச் செயலாளர் வே.செல்வம்
திராவிடர் கழக மாநில அமைப்புச் செயலாளர் வே.செல்வம், கண்களில் கண்ணீர் மல்க,மதுரை மாநகரத்தில் 40 ஆண்டு கால மூத்த தோழர் சோ.இராமமூர்த்தி மற்றும் பீபிகுளம் நவநீதன் பற்றியும் ,அவர்களின் கழகத்திற்கான நீண்ட பங்களிப்பு பற்றியும்,சோ.இராம மூர்த்தி, சொக்கலிங்க நகர் பகுதியில் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களை அழைத்து கூட்டம் நடத்திய அனுப வங்கள் பற்றியும் கூட்டத்தில் பகிர்ந்து கொண்டார். பீபிகுளம் நவநீதன், ஒவ்வொரு ஆண்டும் தந்தை பெரியார் பிறந்த நாள் அன்று தோழர்கள் அனைவரையும் வீட்டிற்கு அழைத்து , குடும்பத்தோடு உபசரிக்கும் தன்மையைக் குறிப்பிட்டுப் பேசினார்.நமது தோழர்கள் உடல் நலத்தில் மிகக் கவனம் எடுக்க வேண்டும் என்பதை நமது தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் சொல்லிக் கொண்டே இருக்கிறார். நாம் கவனம் எடுக்க வேண்டும் என்று தோழர்களிடம் வலியுறுத்திப் பேசினார். மிக நெகிழ்ச்சி யான,அதே நேரத்தில் இருவருக்கும் வீரவணக்கம் செலுத்தும் நிகழ்வாக, மரி யாதை செலுத்தும் நிகழ்வாக படத் திறப்புகள் அமைந்தது.
முனைவர் வா.நேரு
தொடர்ந்து மதுரை மாநகர் மாவட் டத் தலைவர் அ.முருகானந்தம், செய லாளர் சுப.முருகானந்தம்,மதுரை புறநகர் மாவட்ட திராவிடர் கழகச்செயலாளர் த.ம.எரிமலை, பகுத்தறிவாளர் கழக மாநிலத் துணைத்தலைவர் விருது நகர் க.நல்லதம்பி,பகுத்தறிவு எழுத்தாளர் மன்றத்தின் மாநிலத்தலைவர் முனைவர் வா.நேரு உள்ளிட்டோர் உரையாற்றினர்.
தொடர்ந்து உரையாற்றிய மாநில மாணவர் கழக அமைப்பாளர் செந்தூர் பாண்டியன் தமது உரையில், பெரியாரியல் பயிற்சிப் பட்டறை போல தொடர்ந்து நடக்கின்ற பயிற்சி முகாம்களில் கலந்து கொள்ள வேண்டும் திராவிட மாணவர் கழகத்தை வளர்க்கவேண்டும் என்று குறிப்பிட்டு உரையாற்றினார்.
சான்றிதழ் வழங்கல்
தொடர்ந்து திராவிட நாற்றுகளுக்கு சான்றிதழ் வழங்கும் விழா நடைபெற்றது. சான்றிதழ்களை திராவிடர் கழகத்தின் மாநில அமைப் பாளர் அய்யா உரத்தநாடு குணசேகரன் உள்ளிட்ட பொறுப்பா ளர்கள் வழங்கினர்.
மாநில அமைப்பாளர்
அதனைத் தொடர்ந்து உரையாற்றிய திராவிடர் கழகத்தின் மாநில அமைப் பாளர் உரத்த நாடு குணசேகரன் , தந்தை பெரியார் காலம் தொட்டு நீண்ட காலமாக பல்வேறு கழக நிகழ்வுகளை நடத்திய இடம் மதுரை தலைமுறை தலைமுறையாக இயக்கத் திலே இருக்கக் கூடிய பல குடும்பங்களை இங்கே காண முடியும் அந்த வகையில் இன்றைக்கு பெரியார் பண்ணையில் திராவிட நாற்றுக்களாக வந்திருக் கின்ற மாணவர் களுக்கு வாழ்த்துக்கள். தொடர்ந்து இயக்க ரீதியாக செயல்பட கேட்டுக் கொள்கிறேன் என்று குறிப்பிட்டு உரையாற்றினார்.
இரா.பெரியார்செல்வன்
தொடர்ந்து கழக சொற்பொழிவாளர் தஞ்சை இரா.பெரியார் செல்வன் உரையாற்றினார்.அவர் தனது உரையில் பல்வேறு வரலாற்றுச் சம்பவங்களைக் குறிப்பிட்டு, இந்த நாட்டை வெள்ளைக் காரர்கள் 150 ஆண்டுகள் ஆண்டிருக் கிறார்கள் நாயக்கர்கள், இஸ்லாமியர்கள் ஆண்டு இருக்கிறார்கள்.
அதற்கு முன்பே ராஜராஜ சோழன் உள்ளிட்ட சோழர்கள் ,சேர மன்னர்கள், பாண்டிய மன்னர்கள் எல்லாம் ஆண்டி ருக்கிறார்கள். யாராவது பள்ளிக்கூடம் கட்டினார்களா ? என்று மாணவர்கள் மத்தியில் கேள்விகளை எழுப்பினார். தஞ்சை கோயில் கட்டப்பட்டது கூட ஒரு சோக வரலாறுதான், கொத்தடி மைகளை கொண்டு கட்டப்பட்டது என்பதுதான் வரலாறு என்பதனைக் குறிப்பிட்டு, மன்னர்கள் காலத்தில் கட் டப்பட்ட பள்ளிக்கூடங்களில் எத்தனை பார்ப்பனர்கள் படித்தார்கள் என்னும் புள்ளி விவரங்களை கொடுத்தார்.
நம்மை ஆண்ட மன்னர்கள் யாரும் எல்லோரும் படிக்கவேண்டும் என்று நினைக்கவில்லை. பெருந்தலைவர் காமராசர் நினைத் தார். திராவிட இயக்க ஆட்சியாளர்கள் நினைத்தார்கள். நாம் படித்தோம்.
இந்தியாவின் மற்ற மாநிலங்களில் உயர் கல்வி சதவீதம் 25 சதவீதம் ,புதிய தேசியக் கல்விக் கொள்கை 2030க்கு இலக்கு 50% ,ஆனால் இப்போது தமிழ்நாட்டில் உயர்கல்வி விகிதம் 50.7% என்று குறிப்பிட்டு திராவிட நாற்றுக் களாக வந்திருக்கிற மாணவ,மாணவி யர்களுக்கு உற்சாகமூட்டி உரை யாற்றி னார். நிகழ்வில் பெரியாரியல் பயிற்சி பெற்ற மாணவர்கள் ராகேசு, அகில்ராசன் ஆகியோர் நிகழ்வில் உரையாற்றினர்.
நிகழ்ச்சியில் திராவிடர் கழகப் பொறுப்பாளர்கள் சே.முனியசாமி,இரா.திருப்பதி,ச.பால்ராஜ்,க.சிவா,பா.முத்துக்கருப்பன்,பொ.பவுனிராசா,த.இராக்கு,பேக்கரி கண்ணன், அ.அல்லி ராணி, க.நாகராணி, இரா.பிரபாகரன், பகுத்தறிவாளர் கழகப் பொறுப்பாளர்கள் மன்னர் மன்னன், ச.சரவணன், பா.சடகோபன்,பா.செங்கதிர்,விடுதலை வாசகர் வட்டத்தலைவர் இராஜேஸ்வரி, ஆசிரியர் இராமசாமி, சுமதி செல்வம், வடக்குமாசி வீதி செல்லத்துரை, புதூர் பாக்கியம், வண்டியூர் கிருஷ்ண
மூர்த்தி, பலசரக்குக்கடை மாரிமுத்து, போட்டோ இராதா, ஆட்டோ செல்வம் மற்றும் பெரியாரியல் பயிற்சி பெற்ற மாணவ, மாணவிகளும் கலந்து கொண் டனர்.
நிறைவாக புறநகர் மாவட்ட மாணவர் கழக தலைவர் பா.கருப்பசாமி நன்றி கூறினார்.
No comments:
Post a Comment