ரசாயன, உரத்துறை குழு தலைவராக மக்களவை உறுப்பினர் கனிமொழி மீண்டும் நியமனம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, October 10, 2021

ரசாயன, உரத்துறை குழு தலைவராக மக்களவை உறுப்பினர் கனிமொழி மீண்டும் நியமனம்

புதுடில்லி, அக்.10   மக்களவை தலைவர் ஓம் பிர்லா, மாநிலங்களவை தலைவர் வெங்கையா நாயுடுவுடன் ஆலோசனை நடத்தியபிறகு, பல்வேறு துறை சார்ந்த நாடாளுமன்ற நிலைக்குழுக்களை நேற்று (9.10.2021) மாற்றி அமைத்தார். அதேநேரம், பல்வேறு நிலைக்குழு தலைவர்கள் மீண்டும் அதே பொறுப்பில் நியமனம் செய்யப்பட்டிருக்கின்றனர்.

அந்த வரிசையில், ரசாயனம் மற்றும் உரத்துறை நிலைக்குழு தலைவராக தி.மு.. மக்களவை உறுப்பினர் கனிமொழி மீண்டும் நியமனம் செய்யப்பட்டிருக்கிறார்.


No comments:

Post a Comment