ஒற்றைப் பத்தி : ‘விலாக்குத்து!' - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, October 2, 2021

ஒற்றைப் பத்தி : ‘விலாக்குத்து!'

கேள்வி: கோவில்களில் இலவச மொட்டை குறித்து உங்கள் கருத்து.

பதில்: மக்களுக்கு இலவசங்களைக் கொடுத்து மொட்டையான அரசாங்கம், இப்போது மக்களுக்கு இலவசமாக மொட்டை அடிக்கிறது.

('துக்ளக்', 6.10.2021, பக்கம் 28)

கோவில்களில் மொட்டை அடிப்பதை இதைவிட எவரால்தான் கொச்சைப்படுத்த முடியும்? தி.மு..வைத் திட்ட வேண்டுமானால், கோவிலில் மொட்டை போடுவதையும்கூட இரண்டாம் பட்சமாக்கி, கோவில்களில் மொட்டைப் போடும் பழக்கத்தைக் கேவலப்படுத்தி விட்டதேதுக்ளக்'.

தி.மு..வை வம்புக்கு இழுக்க வேண்டுமானால், அந்த இடத்தில் தங்களின் பக்தி விடயத்தைக்கூட கீழே போட்டு மிதிக்கத் தயாராகி விட்டார் திருவாளர் குருமூர்த்தி அய்யர்வாள்.

இலவசம் கொடுப்பது குறித்து குத்திக் காட்டும் குருமூர்த்திகளுக்கு ஒருவிலாக் குத்து' இருக்கவே இருக்கு.

அதுவும் குருமூர்த்தியின் குருநாதரான திருவாளர்சோ' இராமசாமி அய்யரே குருமூர்த்தியின் விலாவில் குத்தஓர் ஆயுதத்தைத்' தயாரித்துக் கொடுத்துச் சென்றுள்ளார்.

அந்த ஆயுதத்தைக் கண்டுபிடித்துக் கொடுக்க ஒன்பது ஆண்டுகள் பயணிக்க வேண்டும்.

20.6.2012 நாளிட்டதுக்ளக்' இதழில் அந்தவிலாக் குத்து' ஆயுதம் பத்திரமாகப் பதுங்கிக் கிடக்கிறது.

கேள்வி: இலவசங்களைக் கொடுத்து ஓட்டு வாங்கிவிடலாம் என்ற அரிய தத்துவத்தை முதலில் கண்டுபிடித்த ஜீனியஸ் காங்கிரஸா, தி.மு..வா?.

பதில்: இவர்கள் யாருமில்லை. விபூதி, குங்குமத்தோடு நிற்காமல், புளியோதரை, வெண்பொங்கல்னு இலவசமா கொடுத்தா பக்தர்கள் வருவாங்கனு கண்டுபிடிச்சது கோவில்தான்.

('துக்ளக்', 20.6.2012)

மக்களுக்கு இலவசங்களைக் கொடுத்து மொட்டையான அரசாங்கம் என்று கேலி செய்யும் துக்ளக்கே, திருவாளர் குருமூர்த்தி அய்யரே - இலவசங்களுக்குக் கர்த்தா கோவில்தான் என்று கூறும் உங்கள் குருநாதர்சோ'வின்விலாக் குத்துக்கு' என்ன பதில்?

 - மயிலாடன்

No comments:

Post a Comment