உலக இதயநாள் விழிப்புணர்வு மருத்துவச் சேவை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, October 1, 2021

உலக இதயநாள் விழிப்புணர்வு மருத்துவச் சேவை

சென்னை, அக். 1 சென்னை பள்ளிக்கரணையில் உள்ள டாக்டர் காமாட்சி நினைவு மருத்துவமனையானதுஇதுவரை தமிழ்நாடு முழுவதிலுமிருந்து - 350-க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு இலவச இதய மருத்துவ சிகிச்சைகளை வழங்கியுள்ளது. இந்த இலவச சேவையை தொடர்ந்து மேற்கொள்ள, இம்மருத்துவமனை, ‘பிஞ்சு இதயங்களைக் குணப்படுத்துவோம்என்ற திட்டத்தை நடத்திவரும் ரோட்டரி கிளப் ஆஃப் மெட்ராஸ் டெம்பிள் சிட்டி (Rotary Club of Madras Temple City) அமைப்புடன் கைகோர்த்துள்ளது. இந்த கூட்டிணைவின் தொடக்கவிழா, பன்னாட்டு இதய நாள் விழிப்புணர்வு தினமான 29.9.2021 அன்று மருத்துவமனை வளாகத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில், சோழிங்கநல்லூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர்  அர்விந்த் ரமேஷ் மற்றும் ரோட்டரி சங்கத்தின் மாவட்ட ஆளுநர் ரொட்டேரியன் ஜெ. சிறீதர், மருத்துவர் ஆர்.பிரேம்சேகர் ஆகியோர் பங்கேற்றுச் சிறப்பித்தனர். இதுவரை தமிழ்நாடு முழுவதிலுமிருந்து இந்த இலவச இதய மருத்துவ சிகிச்சை பெற்ற 350க்கும் அதிகமான ஏழைக் குழந்தைகளுக்கு இலவச மறு ஆய்வுகள் இந்நிகழ்வின்போது மேற்கொள்ளப்பட்டன.  

இந்நிகழ்ச்சியில் பேசிய இம்மருத்துவமனையின் குழந்தைகளுக்கான இதய நோய் மருத்துவ சிகிச்சைப் பிரிவு ஆலோசகர் - மருத்துவர் ஆர். பிரேம்சேகர்குழந்தைகளின் இறப்பு விகிதம் அதிகமாக இருப்பதற்கு பிறவியில் ஏற்படும் இதயக் கோளாறே காரணமாகும். இந்தியாவில், ஆண்டுக்கு 2 கோடியே 80 லட்சம் குழந்தைகள் பிறக்கின்றனர். அதில் சுமார் 1 லட்சத்து 80 ஆயிரம் குழந்தைகளுக்கு பிறப்பின்போதே இதயக் கோளாறு பிரச்சினை இருப்பதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன என்று கூறினார்.

கலைஞர் வழங்கிய நிதியில் இருந்து சிறந்த எழுத்தாளர்கள் 6 பேருக்கு விருது

சென்னை, அக்.1 கலைஞர் வழங்கிய நிதியில் இருந்து 2021ஆம்ஆண்டுக்கான விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ள 6 பேரின் பெயர் விவரங்களை தென்னிந்திய புத்தக விற் பனையாளர்கள், பதிப்பாளர்கள் சங்கம் (பபாசி) வெளியிட்டு உள்ளது. தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள், பதிப்பாளர் கள் சங்கத்தின் (பபாசி) தலைவர் ஆர்.எஸ்.சண்முகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

முன்னாள் முதல்-அமைச்சர் கலைஞர் கடந்த 2007ஆம்ஆண்டு தனது சொந்த நிதியில் இருந்து ஒரு கோடி ரூபாயை பபாசியிடம் வழங்கி, ஆண்டுதோறும் பல்வேறு துறைகளை சேர்ந்த 4 தமிழ் எழுத்தாளர்களுக்கும் ஒரு பிற மொழி எழுத்தாளருக்கும், ஒரு ஆங்கில மொழி எழுத்தாள ருக்கும் தலா ரூ.1 லட்சம் வீதம் பொற்கிழியும், விருதும் வழங்கக் கூறினார்.

அதற்காக பபாசியால் உருவாக்கப்பட்ட அறக்கட்டளை யில் இருந்து, கவிதை, புனைவிலக்கியம், உரைநடை, நாடகம் ஆகியவற்றில் சிறந்து விளங்கும் 4 தமிழ் எழுத்தாளர்களுக்கும், ஆங்கிலம் மற்றும் பிற இந்திய மொழிகளில் சிறந்து விளங்கும் 2 எழுத்தாளர்களுக்கும் ஆண்டுதோறும் விருது மற்றும் ரூ.1 லட்சம் வழங்கி கவுரவித்து வருகிறது.

2007ஆம்ஆண்டில் இருந்து தற்போது வரை 84 எழுத் தாளர்களுக்கு ரூ.84 லட்சம் வழங்கப்பட்டுள்ளது.

2021ஆம் ஆண்டுக்கான விருதுக்கு தகுதியானவர்களை தேர்வு செய்ய குழு அமைக்கப்பட்டது. இந்தக்குழு, அபி (கவிதை), ராஜேந்திர சோழன் (புனைவிலக்கியம்), எஸ்.ராமகிருஷ்ணன் (உரைநடை), வெளி ரங்கராஜன் (நாடகம்), மருதநாயகம் (ஆங்கிலம்), நதித் சாகியா (பிற இந்திய மொழி காஷ்மீரி) ஆகிய 6 பேரை விருதுக்கு தேர்வு செய்துள்ளது.

கரோனா காரணமாக நடைபெறாமல் நின்றுபோன 2020ஆம் ஆண்டுக்கான விருது வழங்கும் விழா, 2021ஆம் ஆண்டுக்கான விழாவுடன் சேர்த்து நடைபெறும்.

விழா நடைபெறும் தேதி மற்றும் நேரம் விரைவில் அறி விக்கப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment