பாலி தீவில் நிலநடுக்கம் மூன்று பேர் பலி - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, October 17, 2021

பாலி தீவில் நிலநடுக்கம் மூன்று பேர் பலி

டென்பசார், அக். 17- இந்தோ னேசியாவில் உள்ள பாலி தீவில் நேற்று (16.10.2021) அதிகாலை நில நடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 4.8 ஆக பதிவா னது. துறைமுக நகரமான பாலியின் வடகிழக்கில் உள்ள சிங்கராஜா பகுதி யில் நிலநடுக்கம் மய்யம் கொண்டிருந்தது. 10 கிலோ மீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டது.

நிலநடுக்கத்தால் கட்டடங்கள் பயங்கரமாக குலுங்கின. அதிகாலையில் தூங்கிக் கொண்டிருந்த மக்கள் நிலநடுக்கத்தை உணர்ந்ததும் வீடுகளை விட்டு அலறியடித்தபடி வெளியே வந்தனர்.

நிலநடுக்கத்தால் கில்லி மாவட்டத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 2 பேர் உயிரிழந்தனர். ட்ருன் யான் மற்றும் கிந்தாமணி கிராமங்களில் வீடுகள், அரசு கட்டடங்கள் இடிந் தன. கரங்காசெம் பகுதியில் வீடு இடிந்ததில் 3 வயது சிறுமி உயிரிழந்தாள்

No comments:

Post a Comment