புதுடில்லி, அக். 31- அய்ஆர் சிடிசி நிறுவனத்தின் பங்கு விலை வீழ்ச்சி அடைந்ததால், 50 விழுக்காடு சேவை கட்ட ணத்தை பங்கிடும் உத்தரவை ரயில்வே துறை திரும்ப பெற் றது. ஒன்றிய அரசு கட்டுப் பாட்டில் இருக்கும் பொதுத் துறை நிறுவனங்களில் அதி கப்படியான வர்த்தகம் மற்றும் லாபத்துடன் இயங்கும் ஒரு முக்கியமான நிறுவனம் அய் ஆர்சிடிசி. இந்திய ரயில்வே துறையின் அய்ஆர்சிடிசி நிறு வனம் நாடு முழுவதற்குமான ரயில் பயணச்சீட்டு முன்பதிவை கையாண்டு வருகிறது. இதற் காக வசூலிக்கும் சேவைக் கட்டண வருவாயில் 50 சத வீத பங்கை நவம்பர் 1ஆம் தேதி முதல் ஒன்றிய அரசுக்கு அளிக்க ரயில்வே துறை உத்தரவிட்டது.
Subscribe to:
Post Comments (Atom)
விடுதலை நாளிதழ்
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's Only Tamil Rationalist Daily.
No comments:
Post a Comment