நியூயார்க்கில் நடைபெற்ற வாக்குப்பதிவில் மீண்டும் மனித உரிமைகள் ஆணைய உறுப்பினராக இந்தியா தேர்வு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, October 16, 2021

நியூயார்க்கில் நடைபெற்ற வாக்குப்பதிவில் மீண்டும் மனித உரிமைகள் ஆணைய உறுப்பினராக இந்தியா தேர்வு

நியூயார்க், அக். 16- அய்க்கிய நாடுகள் அவையின் மனித உரிமைகள் ஆணையத் தின் உறுப்பு நாடாக பெரும்பான்மை ஆதரவு டன் 6-வது முறையாக இந்தியா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.

அய்க்கிய நாடுகள் அவையின் மனித உரி மைகள் ஆணையத்தின் பதவிக்கான தேர்தல் 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும். மனித உரி மைகள் ஆணையத்திற் கான உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதற்கான வாக்கெடுப்பு நியூயார்க் கில் நடைபெற்றது. இந்த தேர்தலில் 6ஆவது முறை யாக மனித உரிமைகள் ஆணைய உறுப்பினராக இந்தியா தேர்ந் தெடுக் கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக சுட் டுரையில் பதிவிட்டிருக் கும் அய்க்கிய நாடுகள் அவைக்கான இந்திய தூதர் திரு மூர்த்தி, ஜன நாயக மற்றும் பன்முக தன்மை கொண்ட நாடான இந்தியா அடிப்படை மற் றும் மனித உரிமைகளை பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளில் தொடர்ந்து ஈடுபடும் என தெரிவித்துள்ளார். தற்போதைய தேர்தல் மூலமாக அடுத்த 3 ஆண்டுகளுக்கு அதாவது 2024-ஆம் ஆண்டு வரை மனித உரிமைகள் ஆணைய உறுப்பினராக இந்தியா உறுப்பு நாடாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக் கது.


No comments:

Post a Comment