உத்தரப் பிரதேசத்தின் மைன்புரி மாவட்டத்தில் உள்ள தவுதபூர் அரசு தொடக்கப்பள்ளியில் பயிலும் 80 மாணவர்களில் 60 பேர் தாழ்த்தப்பட்ட வகுப்பை சேர்ந்தவர்கள் ஆவர். ஆனால், இந்தப் பள்ளியில் மதிய உணவு திட்டத்தின் கீழ் பள்ளியில் சாப்பிடும் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த குழந்தைகளின் பாத்திரங்கள் தனியாக வைக்கப்படுவதாகவும், மேலும் உயர்ஜாதிப்பிள்ளைகள் சாப்பிட்ட பாத்திரங்களைக் கழுவிய பிறகு அவர்களின் பாத்திரத்தில் உணவு வாங்கி சாப்பிடவேண்டும் என்று கூறுவதாக புகார் எழுந்தது.
புகார் உண்மையே!
பள்ளியில் ஆய்வு மேற்கொண்ட அதிகாரிகள், புகார் உண்மைதான் என உறுதியானதால், பள்ளியின் தலைமை ஆசிரியர் கோராம் ராஜ்புத் இடைநீக்கம் செய்யப்பட்டார்.
மேலும், தாழ்த்தப்பட்ட சமூகத்தின் பிள்ளைகளுக்கு உணவு வழங்கமாட்டோம்- அவர்கள் உபயோகித்த பாத்திரங்களைத் தொட மாட்டோம் எனக் கூறிய இரண்டு சமையல்காரர்களும் வேலையிலிருந்து விடுவிக்கப்பட்டனர். இவ்விவகாரம் குறித்து புதிதாகப் பஞ்சாயத்து தலைவராக நியமிக்கப்பட்டுள்ள மஞ்சு தேவியின் கணவர் தான், கல்வித்துறை அதிகாரிகளிடம் புகார் அளித்ததாகக் கூறப்படுகிறது.
“வேலையை விட்டு விடுவோம்
ஜாதியை விட மாட்டோம்”
இதுகுறித்து பேசிய பிஎஸ்ஏ அதிகாரி கமல் சிங், ”பள்ளியில் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்ட போது, தாழ்த்தப்பட்ட மாணவர்கள் பயன்படுத்திய பாத்திரங்கள் தனியாகவும், மற்ற மாணவர்களின் பாத்திரங்களை கழுவி அடுக்கி வைத்த பிறகு தாழ்த்தப்பட்ட சமூகத்து மாணவர்கள் தாங்கள் கொண்டுவந்த பாத்திரங்களில் உணவை அவர்களே எடுத்து வைத்து வெளியே சென்று தனியாக சாப்பிடுவதைக் கண்டனர்.
இது குறித்தி அங்கிருந்த சமையல்காரர்கள் சோம்வதி, லட்சுமி தேவி கூறும் போது தாழ்த்தப்பட்ட சமூகத்தினர் பயன்படுத்திய பாத்திரங்களைத் தொட மாட்டோம். அவர்களுக்கு உணவு கொடுக்கமாட்டோம். எங்களை வற்புறுத்தினால், வேலையை விட்டுவிடுகிறோம் எனக் கூறியுள்ளனர். ஜாதிவெறியோடு பணியாற்றிய இருவர் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டது” என்றார்.
தொடர்ந்து பேசிய மஞ்சு தேவி கணவர் சஹாப் சிங், ” சில மாணவர்களின் பெற்றோர்கள் இதுதொடர்பாக என்னிடம் புகார் அளித்தார்கள். இதுகுறித்து மாணவிகளிடம் கேட்டபோது அங்கு உயர்ஜாதித மாணவர்கள் பயன்படுத்திய 50 முதல் 60 பிளேட்களை நாங்கள் கழுவவேண்டும் அப்படி கழுவி அடுக்கி வைத்தால் தான் எங்களுக்கு உணவு எடுக்க அனுமதி உண்டு என்றனர். இதைக் கேட்டுத் திகைத்துப் போனேன். உடனடியாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கும், உள்ளூர் பத்திரிகையர்களுக்கும் தகவல் தெரிவித்
தனர். இதுதான் உத்தரப் பிரதேசத்தின் உண்மை நிலை.
டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர் தனது பள்ளி நாட்களில் இதுபோன்ற பிரச்சினைகளை எதிர்கொண்டார். ஆனால், வட இந்தியாவில் இன்றும் அதே நிலை தொடர்வது என்பது வேதனைக்குரியது” என்றார். தாழ்த்தப்பட்ட மாணவர்கள் மலைபோல் அடுக்கி வைத்திருக்கும் உயர்ஜாதியினர் சாப்பிட்ட பாத்திரங்களை கழுவும் காட்சிப் பதிவுகள் சமூக ஊடகங்களில் வைரலாகி வரு
கின்றன.
அம்பேத்கர் அனுபவித்த தீண்டாமைக் கொடுமை
இன்றும் உத்தரப் பிரதேசத்தில் தொடர்கிறது

No comments:
Post a Comment