தந்தை பெரியாரின் 143ஆம் ஆண்டு பிறந்தநாள் கொண்டாட்டம்
செய்யாறு, அக்.2 செய்யாறு மாவட்ட திராவிடர் கழகத்தின் சார்பாக தந்தை பெரியாரின் 143ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா சிறப்பாக கொண்டாடப் பட்டது. நகரின் மய்யப் பகுதியில் அமைந்துள்ள தந்தை பெரி யாரின் சிலைக்கு மாவட்ட தலைவர் அ.இளங்கோவன் தலைமையில் செய்யாறு சட்ட மன்ற உறுப்பினர் ஓ.ஜோதி அவர்கள் மாலை அணிவித்து சமுகநீதி நாள் உறுதி மொழி எடுத்துக்கொண்டனர். நிகழ்வில் நகரத் தலைவர் தி.காமராஜ் பகுத்தறிவாளர் கழகத்தை சார்ந்த பொதுக்குழு உறுப்பினர் ந.வெ.கோவிந்தன் மற்றும் கழகத் தோழர்கள் என்.கஜபதி, ந.சீனுவாசன், தங்கம் பெருமாள், டாக்டர் சசிதரன், கிருஷ்ணமூர்த்தி, உள்ளிட்ட கழகத் தோழர்கள் மற்றும் திமுக கழகப் பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.
அய்யா பிறந்த நாளை முன் னிட்டு பெரியார் பெரும் தொண்டர் டி.பி.திரு சிற்றம்பாலம் நினைவாக திரு வோத்தூர் அரசு உயர்நிலைப்பள்ளிக்கு பத்து மின்விசிறிகளை நகர திராவிடர் கழகத் தலைவர் தி.காமராஜ் அவர்கள் மூலமாக சட்ட மன்ற உறுப்பினர் ஓ.ஜோதி அவர்கள் வழங்க திமுக நகர செயலாளர் ஆ.மோகன வேல் முன்னிலையில் பெற்றோர் - ஆசிரியர் சங்கத் தலைவர் கார்த்தி பெற்றுக் கொண்டார். அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது.
தொடர்ந்து பெரியார் நினைவு சமத்துவப்புரத்தில் அமைந்துள்ள சிலை மற்றும் வடமணப்பாக்கம் கிராமத்தில் அமைந்துள்ள தந்தை பெரியாரின் முழு உருவ சிலைக்கும் கழகத் தோழர்கள் மாலை அணிவித்து இனிப்புகள் வழங்கினார்கள். இரண்டு நிகழ்வுகளிலும் சட்டமன்ற உறுப்பினர் ஓ.ஜோதி அவர்கள் மற்றும் பகுத்தறிவாளர் கழக மாவட்டத் தலைவர் வி. வெங்கட்ராமன் மாவட்டச் செயலாளர் பொன் சுந்தர், திராவிட மாணவர் கழகத்தை சார்ந்த மண்டல மாணவர் கழக செயலாளர் க. வெங்கடேசன் மற்றும் பிரவின் குமார், கிஷோர், மணிகண்டன், நரேஷ் கலை யரசன், அரிராஜ். சிலம்பரசன். ஏழுமலை, சிவக் குமார், மணி, ஜீவா உள்ளிட்ட மாணவர் கழகத் தோழர்கள் திராவிட முன்னேற்ற கழகத்தை சார்ந்த முக்கிய பொறுப்பா ளர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
மேலும் தந்தை பெரியார் பிறந்த நாளை முன் னிட்டு நாட்டேரி ஆரம்ப சுகாதார நிலையத்தில் கழகத் தோழர் ந.சீனுவாசன் மற்றும் அரிமா சங்கம் மூலமாக 84 கர்ப்பிணி பெண்களுக்கு மதிய உணவு வழங்கி சிறப்பிக்கப்பட்டது.
பகுத்தறிவு ஆசிரியரணியை சேர்ந்த நல்லாசிரியர் க.கோவேந் தன் கலந்து கொண்டு கழக பொறுப்பாளர்கட்கு சால்வை அணிவித்து சிறப்பு செய்தார்.
சோனா மெடிக்கல்ஸ் உரிமையாளர் எஸ்.குணாளன் அவர்கள் சொந்த செலவில் இனிப்புகள் வழங்கி சிறப்பித் தார்.
இலுப்பநத்தம் இரா.காளிமுத்து படத்திறப்பு
ஆத்தூர்,அக்.2- ஆத்தூர் கழக மாவட்டம் இலுப்பநத்தம் கிராமத்தில் கா.பெரியசாமியின் தந்தையார் இரா.காளிமுத்து படத்திறப்பு விழா நேற்று (1.10.2021) நடைபெற்றது.
இந்நிகழ்வில் மாவட்ட தலைவர் த.வானவில் தலைமை வகித்தார். கழக மாநில அமைப்பாளர் உரத்தநாடு இரா.குணசேகரன் இலுப்பநத்தம் இரா.காளிமுத்து படத்தினை திறந்து வைத்து உரையாற்றினார். முன்னாள் திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கு.சின்னதுரை, செ.குணசேகரன், தலைவாசல் திமுக ஒன்றிய செயலாளர் மணி என்ற பழனிசாமி, திராவிட மாணவர் கழக மாநில அமைப்பாளர் இரா.செந்தூரப்பாண்டியன், தமிழக வாழ்வுரிமை கட்சி மாநில பொறுப்பாளர் செம்முகில், இலுப்பநத்தம் கிராம ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர் சின்னப்பையன், பகுத்தறிவாளர் கழக மாவட்ட தலைவர் வ.முருகானந்தம் மண்டலசெயலாளர் இரா. விடுதலை சந்திரன் ஆகியோர் தோழர் பெரியசாமியின் பணிகளை பாராட்டியும், அவரின் தந்தையின் பணிகள்குறித்தும் பாராட்டி உரையாற்றினர். இறுதியாக மாவட்ட செயலாளர் நீ.சேகர் நன்றி கூறினார் .
No comments:
Post a Comment