அழகப்பா பல்கலைக்கழகத்தில் வட இந்தியர்களின் ஆதிக்கம்
காரைக்குடி, அக் 10 காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தில் தேர்ந்தெ டுக்கப்பட்ட மாணவர்களில் பெரும்பாலா னோர் வட இந்தியாவைச் சேர்ந்தவர் களாகவே உள்ளனர். பட்டதாரி திறனறிவுத் தேர்வின் மூலம் இந்தியாவில் உள்ள முன்னணிப் பல் கலைக் கழகத்தில் உயர் தொழிற்கல்வி பட்டப்படிப்பிற்கு தேர்ந்தெ டுக்கப்படுவார்கள். இதில் சமீபகாலமாக இந்த தேர்வின் மூலம் வட இந்தியர்கள் தமிழர்களுக்கான இடங்களை அப கரித்து வருகின்றனர்.
காரைக்குடி அழகப்பா பல்கலைக் கழகத்தில் முதுகலை பயோ டெக் னாலஜி படிப்பிற்கு 10 வட இந்தியர்கள் தேர்ந் தெடுக்கப்பட்டுள்ளனர். அதே நேரத்தில் காத்திருப்போர் பட்டியலிலும் வட இந்தி யர்களே உள்ளனர். ஏற்கெனவே தமிழ்நாடு மருத்துவக் கல்லூரிகளிலும், இதர உயர் தொழில் நுட்ப ஆய்வுப் படிப்பிலும் வட இந் தியர்களை குறுக்கு வழியில் நுழைத்துக் கொண்டு இருக்கும் ஒன்றிய கல்வித் துறை இந்த ஆண்டும் வட இந்தியர்களுக்கே அதிக இடங்களை வழங்கி உள்ளது.
No comments:
Post a Comment