லண்டன், அக். 17- கார்டிப் நகரில், வேல்ஸ் நாடாளுமன்ற கூட்டத்தை இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத் 14.10.2021 அன்று தொடங்கி வைத்தார். அப்போது அவர் கார்ன்வால் இளவரசி பமீவாவுடனும், நாடாளுமன்றத் தலைவர் எலின் ஜோன்சுடனும் பேசிக்கொண்டிருந்தார்.
அவர், பருவநிலை மாற்றம் தொடர்பான அய்.நா. மாநாடு அடுத்த மாதம் கிளாஸ்கோ நகரில் நடைபெறுவது பற்றி பேசும்போது, “பருவநிலை மாற்ற பிரச்சினை பற்றி பேசுகிறார்களே தவிர அவர்கள் ஒன்றும் செய்வதில்லை என்பது மிகவும் எரிச்சலூட்டுகிறது” என கூறி உள்ளார்.
இந்த ஒளிப்பதிவு சரிவர கேட்கவில்லை என்றாலும் கூட, பருவநிலை மாற்ற பிரச்சினையில் எந்த நடவடிக் கையும் இல்லை என்பதில் ராணி இரண்டாம் எலிசபெத் அதிருப்தி அடைந்துள்ளார் என்பதை வெளிப்படுத்தி விட்டது.
நவம்பர் 8ஆம் தேதி முதல் வெளிநாட்டுப் பயணிகள் அமெரிக்கா வர அனுமதி
வாசிங்டன், அக். 17- கரோனா முதல் அலை பரவலிலிருந்தே அமெரிக்கா கடுமையான பாதிப்புகளை சந்தித்து வந்தது. அதன்காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கைக்காக அந்நாட்டின் தரைவழி எல்லைகள் மூடப்பட்டன. மேலும் வெளிநாடுகளில் இருந்து வரும் சுற்றுலா மற்றும் இதரப் பயணிகளுக்கு கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.
இந்நிலையில் நவம்பர் மாதம் முதல் அமெரிக்க நாட்டின் தரைவழி எல்லைகள் மீண்டும் திறக்கப்படுவ தாக அந்நாட்டு அரசு அறிவித்திருந்தது.
அதனைத் தொடர்ந்து 15.10.2021 அன்று அந்நாட்டு அரசு வெளியிட்ட அறிவிப்பில் நவம்பர் 8ஆம் தேதி முதல் இரண்டு தவணை கரோனா தடுப்பூசிகள் செலுத் திக் கொண்ட வெளிநாட்டுப் பயணிகள் தங்கள் நாட்டிற் குள் அனுமதிக்கப்படுவர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment