‘வேலையின்மை, பசி, வறுமைபற்றி மோகன் பகவத் பேசுவதில்லை!’ - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, October 17, 2021

‘வேலையின்மை, பசி, வறுமைபற்றி மோகன் பகவத் பேசுவதில்லை!’

பகுஜன் சமாஜ் கட்சி விமர்சனம்

லக்னோ, அக்.17- “நிகழ்காலத்தில் மக்கள் சந்திக்கும் உண்மையான பிரச்சினைகளில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பு கவனம் செலுத்துவதில்லைஎன பகு ஜன் சமாஜ் கட்சியின் தேசிய செய்தித் தொடர்பாளர் சுதீந்திரா பதோ ரியா விமர்சித்துள்ளார்.

விஜயதசமி விழாவையொட்டி பேசிய ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத், “நாட்டில் மக்கள்தொகை சம நிலையில் இல்லைஎனவும்தேசிய மக்கள்தொகை கொள்கை திருத்திய மைக்கப்பட வேண்டும்எனவும் தெரிவித்திருந்தார்.

முஸ்லிம்கள் அதிக குழந்தைகள் பெறுவதால், அவர்களின் மக்கள் தொகை அதிகரிக்கிறது; இந்துக்களின் மக்கள் தொகை குறைகிறது என்ற வாதத்தை முன்னிறுத்தி இவ்வாறு அவர் கூறியிருந்தார்.

இதனைத்தான், மாயாவதி தலை மையிலான பகுஜன் சமாஜ் கட்சியின் தேசிய செய்தித் தொடர்பாளர் சுதீந் திரா பதோரியா தற்போது விமர்சித் துள்ளார். “நாட்டின் முக்கிய பிரச்ச னைகளாக பசி, வேலை வாய்ப்பின்மை மற்றும் வறுமை நிலவி வருகிறது.

ஆனால், ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத்திற்கு நாட்டின் உண் மையான பிரச்சினைகளில் கவனம் செலுத்த விருப்பமில்லைஎன்று கூறியுள்ள பதோரியா, “இந்தியா மேலும் மேலும் சமத்துவமற்ற நாடாக தற்போது மாறி வருகிறது. அவ்வாறு இருக்கையில், ஒன்றிய பாஜக அரசு இதில் கவனம் செலுத்த வேண்டும்'' என்றும் வலியுறுத்தி யுள்ளார்.


No comments:

Post a Comment