பெங்களூரு, அக். 10- 17.9.2021 அன்று கருநாடக மாநில திராவிடர் கழகத்தின் சார்பில் தந்தை பெரியார் 143ஆவது பிறந்த நாள் விழாவும் அறிஞர் அண் ணாவின் 113ஆவது பிறந்த நாள் விழாவும் பெங்களூர் தமிழ்ச் சங்க கட்டிடத்தின் மூன்றாவது மாடியில் அமைந்துள்ள பெரியார் மய்யம், மணியம்மையார் அரங்கில் மாநிலத் தலை வர் மு.சானகிராமன் தலைமையிலும் கி.சு. இளங்கோவன் முன்னி லையிலும் நடைபெற்றது.
சிறீராமபுரம் பாவேந் தன் கழகக் கொடியை ஏற்றி வைத்தார். கருநாடக மாநிலச் செயலாளர் இரா.முல்லைக்கோ வர வேற்புரையாற்றினார். தந்தை பெரியார் படத்தை செயலட்சிமி கஜபதியும் அறிஞர் அண்ணா படத்தை வீ.மு.வேலுவும் திறந்து வைத்தனர்.
பு.ர.கஜபதி, இராசா ராம் கி.சு.இளங்கோவன், வரதராஜன், அமுத பாண்டியன், மணிமாறன், மகேஷ்குமார் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். நிகழ்ச்சியில் சமூக நீதி நாள் உறுதிமொழி எடுத் துக் கொள்ளப் பட்டது. பு.ர.கஜபதி அனைவருக் கும் இனிப்பு வழங்கினார்.
நிகழ்ச்சியின் இறுதி யில் மறைந்த கழக உறுப் பினர்கள் செயம்பாள் (கருநாடக மாநிலத் தலை வர் மு சானகிராமனின் இணையர்) சொர்ணா ரெங்கநாதன், நடவரசன், துரைசாமி, எல்லம்மாள், தென்னவன், பெரியப்பா பாண்டியன், பெரியப்பா பாண்டியனின் மகன் ஆகியோருக்கும் கருநா டக மாநிலத்தில் சிறை யில் படுகொலை செய் யப்பட்ட பகுத்தறிவாளர் ஸ்தனிஸ்லாஸ் லூர்து சாமிக்கும் மரியாதை செலுத்தப்பட்டது. மாநிலப் பொருளாளர் ஆர். செயகிருட்டினன் நன்றி கூறினார்.
No comments:
Post a Comment