பன்னாட்டு கடல் எல்லைகளைத் தாண்டும் படகுகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரிப்பு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, October 17, 2021

பன்னாட்டு கடல் எல்லைகளைத் தாண்டும் படகுகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரிப்பு

சென்னை, அக்.17- பன்னாட்டு கடல் எல்லைகளைத் தாண்டும் படகுகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் அபராதம் விதிக் கும் பணியில் மீன்வளத் துறை அதிகாரிகள் தீவிர மாக ஈடுபட்டு வருகின்றனர்.

தமிழ்நாடு முழுவதும் 11 லட்சத்துக்கும் மேற் பட்ட மீனவர்கள் வசித்து வருகின்றனர். இவர்கள், விசைப்படகு, பைபர் படகு உள்ளிட்டவற்றின் மூலம் மீன்பிடிக்கும் பணி களில் ஈடுபட்டு வருகின்ற னர். இந்த சூழலில், கச்சத் தீவு அருகே இந்தியாவுக் கும் இலங்கைக்கும் இடையே பன்னாட்டு கடல் எல்லை வரைய றுக்கப்பட்டுள்ளது. இதைத் தாண்டி செல்லும் படகுகளுக்கு அபராதம் விதிக்கும் பணியில் மீன் வளத் துறை அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டு வரு கின்றனர். இதன்படி, கடந்த 2 ஆண்டுகளில் ரூ.7 லட்சம் அபராதம் வசூலிக் கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக, மீன்வளத்துறை அதிகாரி ஒருவர் கூறியதா வது:

பன்னாட்டு கடல் எல்லைகளைத் தாண்டி மீன்பிடிப்பு பணிகளில் ஈடுபடக்கூடாது என்று மீனவ கிராமங்களுக்கு சென்று தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம். இதுதவிர, கடலோர காவல் படை, கப்பல் படை உள்ளிட்ட அதிகாரிகளின் துணையு டன் பன்னாட்டு கடல் எல்லைகளை மீனவர்கள் தாண்டாத வகையில் கண்காணிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகிறது.

பன்னாட்டு கடல் எல்லையை அறியாமல் செல்லும் மீனவர்களின் படகுகள் பறிமுதல் செய் யப்பட்டால் அல்லது மீனவர்கள் கைது செய் யப்பட்டால் மாநில அர சின் மூலமாக ஒன்றிய அரசுக்கு தகவல் தெரி விக்கப்படும். பின்னர், ஒன்றிய அரசு இலங்கை அரசிடம் பேசி பறிமுதல் செய்யப்பட்ட படகு களை மீட்பது, கைது செய்யப்பட்ட மீனவர் களை இந்தியாவுக்கு அழைத்து வருவது உள் ளிட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப் பட்டு வருகிறது.

சிலர் தெரிந்தே பன் னாட்டு கடல் எல்லையை தாண்டி வருகின்றனர். அவ்வாறு செல்பவர்க ளுக்கு முதல்முறை ரூ.1000, இரண்டாவது முறைரூ. 2,500, மூன்றாவது முறை ரூ.5 ஆயிரத்துடன் படகு உரிமம் தற்காலிகமாக நிறுத்தி வைப்பது, நான் காவது முறை பன்னாட்டு எல்லையை தாண்டினால் படகு உரிமத்தை நிரந்த ரமாக ரத்து செய்வது உள் ளிட்ட அபராதங்களை விதித்து வருகிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment